உத்தரபிரதேச துணை முதல்வராக பதவியேற்கும் மௌரியா..!

உத்திரபிரதேசம் உட்பட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் அண்மையில் நடைபெற்று முடிவடைந்தது. இந்த தேர்தலில் பாஜக தலைமையிலான அரசு நான்கு மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றியது. உத்தரப்பிரதேசத்தில் மீண்டும் யோகி ஆதித்யநாத் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், மாநிலத்தின் துணை முதல்வராக கேசவ் பிரசாத் மௌரியா நியமிக்கப்பட்டுள்ளார்.
கேசவ பிரசாத் மௌரியா புல்பூர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். முதல்வர் யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் கடந்த 2007ஆம் ஆண்டு முதல் இவர் துணை முதல்வராக இருந்துள்ளார். இந்நிலையில், அவர் மாநிலத்தின் துணை முதல்வராக மீண்டும் இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த 2022 சட்டப்பேரவை தேர்தலில் தனது சொந்த தொகுதியில் போட்டியிட்டு மௌரியா தோல்வி அடைந்தார். இருப்பினும் அவர் மாநிலத்தின் துணை முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதேபோல, உத்தரகண்ட் மாநிலத்தில் முதல்வர் வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்த புஷ்கர் சிங் தாமி மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அவர் கட்டிமா தொகுதியில் தோல்வியை தழுவி இருந்தார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தின் துணை முதல்வராக பொறுப்பேற்று இருக்கும் மௌரியா வழக்கறிஞராக பணிபுரிந்து பின்னர் அரசியலுக்கு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.