காட்டு யானை தாக்கி வனத்துறை காவலர் ஒருவர் பலி..!

அஸ்ஸாம் மாநிலம் கோல்பாரா மாவட்டத்தில் காட்டு யானை தாக்கி வனத்துறை காவலர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், 2 வனத்துறை காவலர்கள் பலத்த காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து வனத்துறை அதிகாரி கூறியதாவது , இந்த சம்பவம் அதிகாலை 3 மணியளவில் நிகழ்ந்துள்ளது. காட்டு யானைகள் தாக்கியதில் எங்களது வனக்காவலர்கள் இருவர் காயமடைந்துள்ளனர். அவர்களை கோல்பாரா மாவட்ட மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.

முன்னதாக, அந்தப் பகுதியில் உள்ள கிராம மக்கள் அதிகாலை 2:30 மணி அளவில் காட்டு யானைகள் அட்டகாசம் செய்வதாக புகார் தெரிவித்தனர். மேலும், வீடுகள் பலவற்றை உடைத்து விட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இந்தத் தகவலின் பேரில் வனத்துறை காவலர்கள் அங்கு சென்ற போது இந்த அசம்பாவிதம் அரங்கேறியுள்ளது.

இந்த சம்பவத்தின்போது வனத்துறை காவல் அதிகாரி ஒருவர் காட்டு யானைகள் தாக்கி கொல்லப்பட்டார். அவரது பெயர் அந்தோணி என்பது காவல்துறை வட்டாரங்களின் மூலம் தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.