அரசு நிறுவனங்களில் வாரத்தில் 5 நாள் தான் வேலை… எந்த மாநிலத்தில் தெரியுமா..?

மணிப்பூரில் உள்ள அரசு நிறுவனங்களுக்கு இனி வாரத்துக்கு 5 நாட்கள் தான் வேலை என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

அண்மையில் 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று முடிவடைந்தது. தேர்தலை சந்தித்த 5 மாநிலங்களில் மணிப்பூரும் ஒன்று. இந்த தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து, அம்மாநில, முதல்வராக என். பிரென் சிங் மீண்டும் பதவியேற்றுள்ளார்.

தனது தேர்தல் பிரசாரத்தின் போது, மணிப்பூரில் உள்ள அரசு நிறுவனங்களுக்கு வாரத்துக்கு 6 நாட்களாக இருந்து வரும் வேலை நாட்களை 5 நாட்களாக குறைக்கப்படும் என பிரென் சிங் வாக்குறுதி அளித்திருந்தார். அந்த வகையில், இந்த திட்டத்துக்கு சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த திட்டம் வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளதாக மணிப்பூர் அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, மணிப்பூர் அரசின் கீழ் இயங்கி வரும் நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றில் இனி வாரத்துக்கு திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை 5 நாட்கள் தான் வேலை நாட்கள் ஆகும்.கோடைக்காலத்தில் காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும், குளிர்காலத்தில் காலை 9 முதல் மாலை 5 மணி வரையிலும் அரசு நிறுவனங்கள் இயங்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *