ஆந்திரப் பிரதேசத்தில் உருவாகும் புதிய மாவட்டங்கள்..!

ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் புதிதாக 13 மாவட்டங்கள் நாளை முதல் உதயமாக உள்ளன. இதன் மூலம் தற்போது இருக்கும் 13 மாவட்டங்கள் உட்பட புதிதாக 13 மாவட்டங்கள் உள்ளன. இதனால் மாநிலத்தில் மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை 20 ஆக உயரும். இதற்கான அறிவிப்பை ஆந்திர மாநில அரசு இன்று வெளியிட்டுள்ளது.

அறிவிப்பு வெளியிடப்பட்ட உடனேயே, ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசு, இந்த மாவட்டங்களில் பணியில் இருந்த ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளையும் மாற்றியமைத்துள்ளது. மேலும், புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்களையும் ஆந்திர அரசு நியமித்துள்ளது.

ஆந்திர மாநில அரசு, ஜனவரியில் ஏற்கனவே உள்ள 13 மாவட்டங்களில் இருந்து 26 மாவட்டங்களை பிரிப்பதற்கான வரைவு அறிவிப்பை வெளியிட்டு அதற்கான ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை வரவேற்றது. இந்நிலையில், இன்று வெளியாகியுள்ள அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

ஜெகன்மோகன் ரெட்டி, 2019-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, தனது கட்சி ஆட்சிக்கு வந்தால், ஒவ்வொரு மக்களவைத் தொகுதியையும் ஒரு மாவட்டமாக மாற்றுவோம் என்று வாக்குறுதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

நெருக்கடி நிலைக்கு இம்ரான் கான் அரசே காரணம் – பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் இருந்த நிலையில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்…