ட்ரெண்டாகும் புதியவகை புட்டு ஐஸ் கிரீம்!

ஐஸ் கிரீம் என்றாலே சிரியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி உண்ணும் உணவு. ஐஸ் கிரீமில் பல வகைகள் இருந்தாலும், நாம் அனைவருக்கும் தெரிந்த வகைகள் வெண்ணிலா, ஸ்டாபெர்ரி, சாக்கிலேட், பட்டர்ஸ்காட்ச் தான். தற்போது புதிது புதிதாக ஐஸ் கிரீம் வகையில் வந்துள்ளது. பிளாக் கர்ரன்ட், ப்ளூ பெர்ரி, காட்டன் கேண்டி, மின்ட், காபி அல்மோன்ட் என்று புது வகையான ஐஸ் கிரீம் வகைகளை சொல்லி கொண்டே போகலாம்.

சில ஆண்டுகளுக்கு முன்பு ஃபலூடா என்ற ஐஸ் கிரீம் ட்ரெண்டாகி வந்தது. அதன் பின் ப்ரவ்னி சிஸ்ஸில் (Brownie) ஐஸ் கிரீம் ட்ரெண்ட் ஆகி வந்தது. இதே போல், கேரளத்தின் பாரம்பரிய உணவு என்று சொன்னதுமே, நம் கண் முன்னே வந்து நிற்பது புட்டும் வாழைப்பழமும் . அரிசிப் புட்டு, கோதுமை புட்டு, ராகி புட்டு எனப் பூட்டுகள் பல வகைகளில் உள்ளன. ஆனால், கேரளத்தில் தற்போது புட்டு ஐஸ்கிரீம் ட்ரெண்டாகி இணையத்தைக் கலக்கிவருகிறது.

தற்போது இருக்கும் இணைய உலகில் விதவிதமான உணவுகளை அறிமுகப்படுத்தும் உணவு பிரியர்கள் பெருகிவிட்டார்கள். ‘foodie sha’ என்கிற கேரள இளைஞர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கேரளத்தின் ஓர் உணவகத்தில் புட்டு ஐஸ்கிரீமை தயார் செய்யும் வீடியோவைப் பதிவு செய்திருந்தார். வித்தியாசமான இந்த புட்டு ஐஸ்கிரீமைப் பார்த்தவர்கள் அதிகஅளவில் பகிர, இந்த வீடியோ வைரலானது. சரி,இந்தப் புட்டு ஐஸ்கிரீமை எப்படி செய்கிறார்கள்? புட்டுக் குழாயில் அரிசிமாவை நிறப்புவதிற்கு பதிலாக ஐஸ்கிரீமை இடுகிறார்கள். இதனிடையே தேங்காய்த் துருவலுக்கு பதில் கார்ன்ஃபிளேக்ஸ் மற்றும் சாக்கோசிப்களை நிரப்பிவிடுகிறார்கள். அவளவுதான், புட்டு ஐஸ்கிரீம் தயாராகிவிட்டது!

Leave a Reply

Your email address will not be published.

vaaitha

நாங்க அதுக்காக அழையுறமா?… ‘வாய்தா’-வுக்கு எதிராக கொந்தளித்த வழக்கறிஞர்கள்!

வாய்தா என்ற திரைப்படத்திற்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது….