வெயில் காலத்தில் அதிகம் உண்ண வேண்டிய உணவு வகைகள்!

வெயில் காலம் துவங்கி உள்ளதால் பலருக்கு உடலில் பல பிரச்சனைகள் வர ஆரம்பித்துவிடும். வெயில் காலத்தில் நம் உடம்பை ஆரோக்கியமாக வைத்து கொள்ள காலத்திற்கு ஏற்றவாறு உணவு வகைகளை உண்ண வேண்டும். அதாவது வெயில் காலத்தை பொறுத்தவரை வெப்பம் அதிகமாக இருக்கும் அதனால் நம் உடல் வெப்பத்தின் காரணமாக அடிக்கடி சோர்வுற்றுவிடும். வெயிலால் உண்டாகும் சோர்வை தடுக்க குளிர்ச்சியான உணவு வகைகள் மற்றும் பழச்சாறுகளை அதிகம் உண்ண வேண்டும்.

உதாரணத்திற்கு இளநீர், தர்பூசணி, கிர்னி பழம், ஆரஞ், எழுப்பிச்சை, முலாம் பழம் போன்ற பழங்களை அதிகம் உட்கொள்ள வேண்டும். காரம் அதிகம் உள்ள பொருட்களை அறவே தவிர்க்க வேண்டும். மோர், தயிர் போன்ற உணவு பொருட்களை அதிகம் உட்கொள்வதனால் அது நம் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவும்.

பழ வகைகளை தாண்டி அன்றாட சமையலில் முள்ளங்கி, வெள்ளரிக்காய், கேரட் போன்ற காய் வகைகளையும் மற்றும் கீரைவகைகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். அசைவ பிரியர்கள் கரி வகைகளை தவிர்த்து விட்டு கடல் உயிரினங்களை உண்ணலாம். மீன் வகைகள் பெரும்பாலும் உடலுக்கு குளிர்ச்சியானவை. ஆனால், நண்டு குளிர்ச்சியான உணவு வகை இல்லை. இவ்வகையான உணவுகளை வெயில் காலத்தில் உண்டு வந்தால் அது நம் உடலை குளிர்ச்சியாக வைத்து இருக்க உதவும்.

Leave a Reply

Your email address will not be published.

vaaitha

நாங்க அதுக்காக அழையுறமா?… ‘வாய்தா’-வுக்கு எதிராக கொந்தளித்த வழக்கறிஞர்கள்!

வாய்தா என்ற திரைப்படத்திற்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது….