கோடை காலத்தில் நாவல் பழம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?

நாவல் பழம் பிடிக்காத மனிதர்களே கிடையாது என்று கூறலாம். இப்பழம் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி உண்ணும் இயற்கை அன்னையின் கொடை. இம்மரத்தின் இலை,பட்டை,காய் ,பழம்,வேர் என அனைத்தும் மருத்துவ குணம் வாய்ந்தது. மேலும் இந்த பழத்தில் பாஸ்பரஸ்,கால்சியம்,தாமிரம்,சோடியம் மற்றும் வைட்டமின் பி போன்ற சத்துக்கள் அதிகளவு நிறைந்துள்ளது. இதை உண்பதால் இவற்றில் உள்ள இரும்புச் சத்து ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபினை  அதிகரிக்க செய்கிறது. 

மேலும் நீரழிவு,மாதவிடாய்,சிறுநீர் கழிக்கும் பொது ஏற்படும் எரிச்சல்,வயிற்று போக்கு ,மலட்டுத்தன்மை மற்றும் இதயம் சார்ந்த நோய்களுக்கும் இம்மரம் அரு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது . 

கோடை காலத்தில் நாம் நாவல் பழம் சாப்பிடுவதால் வெயிலினால் ஏற்படும் சக்தி இழப்பு , உடல் சோர்வு மற்றும் சூட்டினால் ஏற்படும் கண் எரிச்சல் போன்ற அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்யும். ஆகவே நாவல் பழத்தை எங்கு பார்த்தாலும் யோசிக்கவே வேண்டாம், வாங்கி உண்ணுங்கள். கோடையின்  தாக்கத்திலிருந்து உங்களை தற்காத்து கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published.