3 தளங்கள், 54,235 சதுர அடி; ஆவடி அரசு மருத்துவமனையின் சிறப்பம்சங்கள்!

திருவள்ளூர் மாவட்டம் , ஆவடியில் அரசு மருத்துவமனைக் கட்டடம் கட்டும் பணி தமிழக நெடுஞ்சாலைகள் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வா வேலு அவர்கள் பார்வையிட்டார்.

ஜப்பான் நிதி உதவியுடன் ஆவடி மருத்துவமனை வளாகத்தில் 1.79 ஏக்கர் கட்டப்பட்டு பரப்பளவில் கூடுதல் மருத்துவமனை வளாகம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இங்கு தரைதளம் உள்ளிட்ட 3 தளங்களுக்கு இவ்வளாகத்தில் வடிவமைக்கப்பட்டு 54,235 சதுர அடிப் பரப்பளவில் இக்கூடுதல் மருத்துவமனைக் கட்டடம் பொதுப் பணி துறையால் கட்டப்பட்டு வருகிறது .

இம்மருத்துவமனையில் விபத்து சிகிச்சைப் பிரிவு , மருத்துவ ஆய்வகங்கள் ஆண்கள் மற்றும் பெண்கள் சிகிச்சை பெறுவதற்கான பொது வார்டுகள் தலா 30 படுக்கை வசதியுடன் , 3 அறுவை சிகிச்சை அரங்கங்கள் அமைக்கப்பட்டு வருகிறது .

மேலும் இந்த மருத்துவமனையில் இரத்தவங்கி , மருந்தகம் , பொருட்கள் வைப்பறை ஆகியவைகளும் அமைக்கப்படுகிறது . நோயாளிகளும் அவர்களுடன் வருபவர்களும் சிரமமின்றி சிகிச்சை பெற்றிட தேவையான கழிப்பிட வசதிகள் , குடிநீர் வசதிகள் , சாய்தள வசதிகள் , மின்தூக்கி வசதிகள் தங்குமிடம் ஆகியவையும் இக்கட்டடத்தில் அமைக்கப்படுகின்றன .

Leave a Reply

Your email address will not be published.

கடலூரில் கொட்டி தீர்த்த கன மழையால் வாழை மரங்கள் சேதம்: இழப்பீடு வழங்க வேல்முருகன் கோரிக்கை !!

தமிழகத்தில் நெல் சாகுபடிக்கு அடுத்தப்படியாக அதிகமாக பயிரிடப்படுவது வாழையாகும். இந்தியாவிலேயே அதிகப்படியாக வாழை…