தினம் ஒரு செவ்வாழை பழம்: சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா ?

வாழைப் பழங்களில் நிறைய வகைகள் இருந்தாலும் அதிக சத்துக்கள் உடையதாக இருப்பது செவ்வாய் மட்டும்தான். செவ்வாழை பழத்தை பொருத்தவரையில் பொட்டாசியம், வைட்டமின் பி, சி மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளது.
அந்த வகையில் பொட்டாசியம் நம் உடலுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. குறிப்பாக இரத்த அளவை குறைப்பது, கிட்னியில் கற்கள் வராமல் போன்றவற்றில் முக்கிய பங்கு அகிக்கிறது. இந்நிலையில் புகைப்பழக்கம் இருப்பவர்கள் தினம் ஒரு செவ்வாழை பழத்தை சாப்பிடுவது நல்லது.
இதனிடையே சருமத்தை பாதுகாப்பது மட்டுமில்லாமல், ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவையும் அதிகரிக்க செய்கிறது. இதனால் அனிமியா என்ற ரத்த சோகை நோயை முழுமையாக குணப்படுத்தலாம்.
பலபேருக்கு செரிமானப் பிரச்சினை என்பது அதிகரித்துக் கொண்டுதான் வருகிறது. இதற்கு தினம் ஒரு செவ்வாழைப் பழம் சாப்பிடுவதால் நிரந்தர தீர்வு காண முடியும்.
இந்நிலையில் கிட்னி ஃபெயிலியரில் இருப்பவர்கள் செவ்வாழைப்பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். அதுமட்டுமில்லாமல் பொட்டாசியல் அதிகம் இருப்பவர்கள் டயட்டை மேற்கொண்டால் இதனை தவிர்ப்பது நல்லது.