நிரந்தரமாக உடல் எடையை குறைய இதை பின்பற்றினாலே போதும்..?

முந்தைய காலத்தில் உடல் எடை குறைப்பது என்பது எளிதான ஒன்றாக அமைந்தது. ஆனால் நிரந்தரமாக உடல் எடையை குறைப்பது என்பது கடினமான ஒன்றாக அமைந்தது. இந்நிலையில் உடல் எடையினை குறைக்க பின்வரும் வழிமுறைகளை பின்பற்றினாலே போதும்.

  1. தினமும் காலையில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை மற்றும் உப்பு சேர்த்து குடிப்பதால் உடல் எடை கணிசமாக குறையும்.
  2. இஞ்சி சாறு உடலில் மெட்டபாலிச அளவை அதிகரிக்கும். உடலில் மெட்டபாலிசத்தின் அளவு அதிகமானால் கலோரிகள் எரிக்கப்பட்டு உடல் எடை குறையும்.
  3. 4 அல்லது 5 பூண்டுபற்களை ஒரு டம்ளர் பாலில் போட்டு பாதியாக சுண்டும் வரை கொதிக்க வைத்து இறக்கி பாலுடன் பூண்டு சேர்த்து சாப்பிட வேண்டும். அப்போது பூண்டு உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றும்.
  4. தினமும் வெதுவெதுப்பான மாட்டுப் பாலில் தேன் கலந்து குடித்து வந்தால் உடல் எடையில் நல்ல மாற்றம் தெரியும்.
  5. புடலங்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் அது உங்கள் உடல் எடையை குறைக்க உதவும். அதுவும் புடலங்காய் பொரியல் செய்து சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட்டால் ஆரோக்கியமாக இருக்கும்.
  6. தினமும் மோரில் கேரட்டை அரைத்து கலந்து குடித்து வருவதால் உடல் எடை குறைவதை நன்கு காணலாம்.
  7. பப்பாளிக்காயை பருப்புடன் சேர்த்து அடிக்கடி சாப்பிட்டு வர உடல் எடை குறைவதற்கு உறுதியாக இருக்கும்.
  8. உடல் எடையை குறைப்பதற்கு காய்கறி சூப் குடிப்பது நல்லது. அந்த வகையில் காய்கறி சூப் குடிக்கும் போது அதில் மிளகுத்தூள் கலந்து குடிப்பதன் மூலம் படிப்படியாக கொழுப்புகள் கரையும்.
  9. மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு தினமும் காலையில் தக்காளி சாப்பிட்டு வர கொலஸ்ட்ராலின் அளவு கட்டுப்பாட்டுடன் இருப்பதோடு கொழுப்புகள் குறைந்து உடல் எடை குறைக்க வழிவகுக்கிறது.
  10. உடல் எடையை குறைக்க உதவும் உணவுப் பொருட்களில் முக்கியமாக அமைவது கொள்ளு. 1 அல்லது 2 டீஸ்பூன் கொள்ளு எடுத்து இரவில் ஊறவைத்துக்கொள்ளவும். மறுநாள் காலையில் அந்த நீரை பருகுவதின் மூலம் உங்கள் எடை குறைவதை கண்கூடாக காணலாம்.
  11. உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் முட்டைகோஸை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். முட்டைக்கோஸ்ஸை சாலட் ஆகவோ அல்லது வேறு விதமாகவோ சமைத்து உண்ணலாம்.
  12. மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு தினமும் காலையில் 10 கருவேப்பிலை இலைகளை உண்டு வர உடல் எடையில் நல்ல மாற்றம் தெரியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *