கொரோனாவுக்கு மாத்திரை கண்டுபிடிப்பு

பிரிட்டன் நாட்டில் கொரோனாவுக்கு மாத்திரை கண்டுபிடித்துள்ளனர்.

கடந்த ஒரு ஆண்டாக கொரோனா பெருந்தொற்று மக்களை வாட்டி வதைக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். இந்த பெருந்தொற்றால் லட்சக்கணக்கான மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். கொரோனா பெருந்தொற்றை  தடுக்கும் வகையில் உலகில் பல்வேறு நாடுகள் ஊரடங்கு அமல்படுத்தியது. தொடர் ஊரடங்கு மாற்று கொரோனா தடுப்பூசி போன்றவையால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடிந்தது. 

இந்நிலையில், பிரிட்டன் நாட்டில் கொரோனாவுக்கென்ன மாத்திரையை கண்டுபிடித்துள்ளனர். உலகிலே கொரோனாவுக்கு மாத்திரையை பரிந்துத்துறைந்த முதல் நாடு பிரிட்டன்.இந்த மாத்திரைக்கு மால்னுபிராவிர் (molnupiravir) என்று பெயரிடப்பட்டுள்ளது.இதற்கு பிரிட்டனின், மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்களுக்கான ஒழுங்குமுறை ஆணையம் (The Medicines and Healthcare products Regulatory Agency MHRA) அவசர கால பயன்பாட்டிற்கான அனுமதியை வழங்கியுள்ளது. இந்த மாத்திரை பிரிட்டனில் லேஜ்விரோ (Lagevrio ) என்ற பிராண்ட் பெயரில் விற்பனை செய்யப்படவுள்ளது.

மேலும் இந்த மாத்திரையை அமெரிக்காவை சேர்ந்த  மெர்க் என்ற நிறுவனமும் மற்றும் ரிட்ஜ்பேக் பயோதெரபியூடிக்ஸ் நிறுவனமும்  இணைந்து தயாரித்துள்ளன.மெர்க் நிறுவனத்துடன் 4 லட்சத்துக்கு 80 ஆயிரம் மாத்திரைகளை வாங்க பிரிட்டன் அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டுக்குள் 2 கோடி மாத்திரைகளை உற்பத்தி செய்ய மெர்க் நிறுவனம் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.கோவிட் 19 தொற்றுக்கான பரிசோதனையை மேற்கொண்ட பின்னர் இந்த மாத்திரையை அறிகுறி தொடங்கிய 5 நாட்களுக்கு உட்கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு இருமுறை இந்த மாத்திரையை உண்ண வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *