இதுக்கும் ஓ.கே சொல்லிட்டாங்களா! இந்தியாவில் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிக்கு அனுமதி

கடந்த 2019-ம் ஆண்டு சீனாவிலிருந்து பரவ தொடங்கிய கொரோனா, மக்களை  வாட்டி வதக்கி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். அடுத்த மாதம் கொரோனா முற்றிலும் அழிந்து விடும் என்று சொல்லி சொல்லி இரண்டு ஆண்டுகள் கழிந்துவிட்டன. இரண்டு ஆண்டுகள் கழிந்த பின்பும் கொரோனாவின் கோரதாண்டவம் குறைந்த பாடில்லை.கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி மட்டுமே தீர்வு என்ற ஒற்றை இலக்குடன் உலகின் பெரும்பாலான நாடுகள் பயணித்து வருகிறது.அதன்படி இந்தியாவில் கோவி ஷில்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.அதேபோல ரஷ்யாவில் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசியும், அமெரிக்காவில் பைசர் தடுப்பூசியும் போடபட்டு வருகிறது.

இந்நிலையில் இந்தியாவின் அவசர கால பயன்பாட்டுக்காக ரஷ்ய தயாரிப்பான ‘ஸ்புட்னிக் லைட்’ தடுப்பூசிக்கு ஒன்றிய மருந்துகள் தர கட்டுப்பாடு ஆணையம் அனுமதி அளித்துள்ளது. மேலும் இந்த கொரோனாவுக்கு எதிராக 65% மேல் பயன் தருவதாக ஸ்புட்னிக் லைட் பற்றி மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.