இனி கொரோனா தடுப்பூசி செலுத்த தேவையில்லை

உலகம் முழுவதும் கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று பரவ தொடங்கியது. கொரோனவால் பெரும்பாலான மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த பெருந்தொற்றை  கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்களின் அன்றாட வாழ்வியல் பெரிதாக  பாதிப்படைந்தது. மேலும் இந்த பொதுமுடக்கத்தால் நிறைய பேர் தங்கள் வேலையும் இழந்தனர். பின்னர் கொரோனா தடுப்பூசி கண்டுபிடித்து, அதனை மக்களுக்கு  செலுத்தியதால் கொரோனா தொற்று குறைய தொடங்கியது.

இந்நிலையில் கொரோனாவை தடுப்பதற்கு கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக புதிய முறையை அறிமுகப்படுத்த உள்ளது இந்திய அரசு. அதன்படி இந்தியாவை சேர்ந்த Glenmark Pharmaceuticals Ltd என்ற நிறுவனம் கனடா நாட்டின் பிரபல மருந்து நிறுவனமான SaNOtize-உடன் இணைந்து, ‘FabiSpray’ என்ற நைட்ரிக் ஆக்சைடு நாசி ஸ்ப்ரேயை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த FabiSpray-ஐ கொரோனாவால் தீவிரமாக பாதிக்கப்பட்ட நோயாளிகளும் பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் இந்த ஸ்பேரேவை  கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள், வயதானவர்கள் என அனைவரும் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.