சீனாவில் நடக்கும் கொடூரம்..! உயிருடன் இருக்கும்போதே வெட்டி எடுக்கப்படும் இதயம்..?

சீனாவில் மரண தண்டனைக்கு  உள்ளான கைதிகள், உயிருடன் இருக்கும் போது அவர்களின் இதயம் வெட்டி எடுக்கப்படுவதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.சீனாவில் உள்ள 56 மருத்துவமனைகளில் இதுவரை சுமார் 71 கைதிகளின் இதயத்தை இதுபோன்று  வெட்டி எடுத்துள்ளதாக ஆஸ்திரேலியாவை  சேர்ந்த ஒரு பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த விவகாரத்தில், சீனா முழுவதும் சுமார் 300 மருத்துவர்கள்  ஈடுபடுத்தப்பட்ட தாக செய்திகள் வெளியாகியுள்ளது . சீனாவில் உள்ள மருத்துவமனைகளில்  உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு இந்த இதயத்தை பயன்படுத்துவதாக இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது 

மரண தண்டனைக்கு உண்டான கைதிகள் உயிருடன் இருக்கும் போது அவர்களை  செயற்கையாக மூளைச்சாவு மூலம் செயலிழக்க செய்து அவர்களின் இதயத்தை மருத்துவர்கள் எடுத்து உறுப்பு தானம் என்ற முறையில் இதயத்தை  மாற்றுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

ஆனால்  கைதிகளை துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக  அறிக்கை தாக்கல் செய்வதாக இந்த பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. ஆனால் இதை சீன அரசு முற்றிலுமாக  மறுத்துள்ளது. எப்போதும் இது போன்ற கொடூர செயல்களில் சீன மருத்துவர்கள் ஈடுபடமாட்டார்கள் என சீன அரசு தெரிவித்துள்ளது. 

ஆனால் அதை மறுத்த ஆஸ்திரேலிய  பல்கலைக்கழகம் மற்ற நாடுகளின் உறுப்பு மாற்று சிகிச்சைக்கு மாத கணக்கில் ஆகும் போது,  சீனாவில் மட்டும் எப்படி  ஒரே  வாரத்தில் உறுப்பு மாற்று சிகிச்சை நடக்கிறது என கேள்வி எழுப்பியுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published.

நெருக்கடி நிலைக்கு இம்ரான் கான் அரசே காரணம் – பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் இருந்த நிலையில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்…