காங்கிரஸை கைவிட்டு எதிர்க்கட்சிகளின் முகமாக மாற முயற்சிக்கிறாரா மம்தா !

எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து அதற்கு தலைமை தாங்க முயற்சிக்கிறார் மம்தா பானர்ஜி. அதற்கு ஏற்றார் போல்,  முன்னர் பாஜகவில் இணைந்த காங்கிரஸ் கட்சியினர் தற்போது திரிணாமுல் காங்கிரசை நோக்கி படையெடுக்கின்றனர்.

மேற்குவங்க முதலமைச்சரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி, தேசிய அளவில் பாஜகவுக்கு மாற்று சக்தியாக தன்னை முன்னிறுத்தும் வகையில் காய் நகர்த்தி வருகிறார்.பாரம்பரிய காங்கிரஸ் கட்சி தற்போது கட்சிக்குள் நிலவும் அதிருப்தி, தேர்தல்களில் தொடர் தோல்விகள், பாஜகவை எதிர்த்து வெற்றி பெறும் என்ற நம்பிக்கையின்மை போன்றவற்றால் கட்சியை கை கழுவும்  தலைவர்கள் போன்ற  பல்வேறு பிரச்சனைகளால் தள்ளாடி வருகிறது. இதனைப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து அதற்கு தலைமை தாங்க முயற்சிக்கிறார் மம்தா பானர்ஜி. அதற்கு ஏற்றார் போல் முன்னர் பாஜகவில் இணைந்து வந்த காங்கிரஸ் கட்சியினர் தற்போது திரிணாமுல் காங்கிரசை நோக்கி படையெடுக்கின்றனர். மேகாலயாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் 12 பேர் திரிணாமுலுக்கு தாவியுள்ளனர்.இது தவிர கோவா, ஹரியானா, திரிபுரா, உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சில காங்கிரஸ் தலைவர்களும் மம்தாவுடன் இணைந்திருக்கின்றனர்.

இது ஒரு பக்கம் இருக்க தொடர்ச்சியாக எதிர்க்கட்சி தலைவர்களையும் மம்தா சந்தித்து வருகிறார். மும்பையில், NCP தலைவர் சரத் பவாருடனான அவரது சந்திப்பு தேசிய அரசியலில் பேசு பொருளாக மாறியுள்ளது. அரசியல் தலைவர்களை மட்டுமல்லாமல், வளரும் தொழிலதிபர்களையும் தொடர்ச்சியாக சந்திக்கிறார் மம்தா. 2013- ஆம் ஆண்டில் பிரதமர் மோடி கையிலெடுத்த யுக்தி இது. மும்பையில் இப்படியான ஒரு சந்திப்பின் போது, இளம் தொழிலதிபர்களிடம், இந்தியாவின் பிரதமராக தனக்கு அனைத்து தகுதிகளும் இருப்பதாக தெரிவித்துள்ளார். 7 முறை நாடாளுமன்ற உறுப்பினர், மத்திய அமைச்சர், மிகப்பெரிய மாநிலத்தில் 3-வது முறையாக முதலமைச்சர் என்பவை அவர் சுட்டிக்காட்டும் தகுதிகளாகும். ஆனால் காங்கிரசை தவிர்த்து விட்டு மற்ற கட்சிகள் இணைந்து மத்தியில் ஆட்சியை பிடிப்பது நடைமுறைக்கு சாத்தியமா என்ற கேள்வி எழுகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published.