#BREAKING ‘முடியாது’… முதல்வர்கள் ஸ்டாலின், மம்தாவிற்கு ஷாக் கொடுத்த மோடி!

Modi

குடியரசு தின விழாவில் தமிழ்நாடு ஊர்தி பங்கேற்பது குறித்து மறுபரிசீலனை செய்ய முடியாது என மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

குடியரசு தினத்தன்று நடைபெற உள்ள அணிவகுப்பில் சுதந்திர போராட்ட வீரர்களான பாரதியார், வேலுநாச்சியார், மருது சகோதர்கள், வ.உ.சிதம்பரனாரின் உருவப்படங்கள் அடங்கிய அலங்கார ஊர்தியை தமிழ்நாடு அரசு சமர்ப்பித்திருந்தது. தமிழ்நாடு அரசு சமர்பித்த அலங்கார ஊர்தியில் இருந்த சுதந்திர போராட்ட வீரர்கள் உலக அளவில் பிரபலமானவர்கள் இல்லை என்பதால் அதனை நிராகரிப்பதாக மத்திய பாதுகாப்புத்துறை நிபுணர்கள் குழு நேற்று அறிவித்திருந்தது.

இதனையடுத்து தமிழ்நாடு அரசு சார்பில் 4 சுற்றுகளைக் கடந்த அலங்கார ஊர்திக்கு அனுமதிக்கு அளிக்க வேண்டுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில் பிரதமர் மோடி தலையிட்டு, இந்த ஆண்டு சுதந்திர போராட்ட வீரர்களான பாரதியார், வ.உ.சி., வேலுநாச்சியார், மருது சகோதரர்கள் அடங்கிய அலங்கார ஊர்திகள் அணிவகுப்பில் இடம் பெற ஆவணம் செய்ய வேண்டுமென வலியுறுத்தி இருந்தார்.

இதேபோல் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும், தங்களது மாநிலம் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அலங்கார ஊர்திக்கு அனுமதி அளிக்க வேண்டுமென பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் மத்திய அரசு தமிழ்நாடு மற்றும் மேற்குவங்கத்தின் கோரிக்கையை நிராகரித்துள்ளது.

குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத்தின் அலங்கார ஊர்தி பங்கேற்காது என மத்திய பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி பங்கேற்தாதற்கான காரணம் குறித்து ஏற்கனவே விளக்கமளிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை மறுபரிசிலீனை செய்ய முடியாது என்றும் மத்திய பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *