திமுக குறித்து காங் எம்.பி.களுக்கு கே.எஸ். அழகிரி போட்ட ஆர்டர்!

நாடாளுமன்றத்தில் இன்றைய குடியரசுத் தலைவர் உரையின்போது நீட் தேர்வை ரத்து செய்யக் கோரும் திமுகவின் தீர்மானத்தை காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆதரிப்பார்கள் என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்திலுள்ள கிராமப்புற ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் எதிர்காலத்தை பாழடித்து, மருத்துவக் கனவை சிதைத்து வருகிற நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுகிற வகையில், தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற தமிழக ஆளுநர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்து தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட தமிழக மக்களவை உறுப்பினர்கள் இன்றைக்கு எதிர்ப்பை தெரிவிக்க இருக்கிறார்கள். குடியரசுத் தலைவர் இன்றைக்கு உரை நிகழ்த்தும்போது, தி.மு.க. கொண்டு வருகிற நீட் தேர்வை ரத்து செய்யக் கோரும் தீர்மானத்தை மக்களவை காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆதரிப்பார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பை உதாசினப்படுத்தி வருகிற மத்திய பாஜக. அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்ற வகையில் குடியரசுத் தலைவர் உரையை தொடங்குகிறபோது, தமிழகத்தைச் சேர்ந்த திமுக தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியைச் சேர்ந்த மக்களவை காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்புக் குரலை இன்றைக்கு வெளிப்படுத்த இருக்கிறார்கள்.

இதை காங்கிரஸ் கட்சி ஆதரிப்பதோடு, இன்றைய எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கெடுத்துக் கொள்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

vaaitha

நாங்க அதுக்காக அழையுறமா?… ‘வாய்தா’-வுக்கு எதிராக கொந்தளித்த வழக்கறிஞர்கள்!

வாய்தா என்ற திரைப்படத்திற்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது….