கன்டெய்னர், கன்டெய்னராக பணமில்லை… கமல் ஹாசன் எடுத்த அதிரடி முடிவு!

நேர்மையான அரசியல் நடத்தும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு நன்கொடை தரக்கோரி, அக்கட்சியின் தலைவர் கமல் ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பொது மக்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
மக்களுக்கான அரசியலைச் செய்யும் தேர்தல் போரில் பெட்டி பெட்டியாக, மன்னிக்கவும், கன்டெய்னர் கன்டெய்னராக பணம் வைத்திருக்கக் கூடிய, அசுர பலம் வாய்ந்த ஊழல்வாதிகளை எதிர்த்து களத்தில் நிற்கிறோம். இவர்களை எதிர்த்துப் போராட எங்களிடம் துணிச்சல் இருக்கிறது. திறமை இருக்கிறது. நேர்மை இருக்கிறது. ஆனால், போதிய பணம் இல்லை.

என் தொழிலில் சம்பாதிக்கும் பணத்தில் முறையாக வரி செலுத்தியது போக எஞ்சிய தொகையில் பெருமளவை நான்மக்களுக்கான அரசியலுக்குத் தான் செலவிடுகிறேன். ஆனால்பூதாகரமான ஊழல் பெருச்சாளிகளை எதிர்த்துப் போராட என் ஒருவனின் சம்பாத்தியம் போதாது. மக்களுக்கான அரசியலை செய்ய, மக்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த மக்களாகிய உங்களிடமே உரிமையுடன் கொடை கேட்கிறோம். நேர்மை அரசியலுக்கு நன்கொடை தாருங்கள் என ஊரறிய உலகறிய கேட்கிறோம். என மக்களிடம் நிதி கோரியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.