பஞ்சாப் முதல்வர் வேட்பாளராக சரண்ஜித் சன்னி தேர்வாகியுள்ளார்

ஒரு காலத்தில் இந்திய துணைக்கண்டத்தை முழுவதும் ஆட்சி செய்து கொண்டிருந்த காங்கிரஸ் கட்சி தற்போது நாளுக்கு நாள் வீழ்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். கட்சியின் மூத்த தலைவர்கள் பதவிக்காகவும், பணத்துக்காகவும் வேறு கட்சிகளுக்கு தாவுவதாலும், உட்கட்சி பூசல்களாலும் காங்கிரஸ் கட்சி அதன் மதிப்பை இழந்து வருகிறது.
இரண்டு மாதங்களுக்கு முன்பு பஞ்சாபின் முதல்வராக இருந்த அம்ரிந்தர் சிங், உட்கட்சி பூசலால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அவர் ராஜினாமா செய்த பின் முதல்வர் பதவியை யாருக்கு கொடுக்கலாம் என்று காங்கிரஸ் தலைமை யோசித்து கொண்டிருக்கையில் பஞ்சாபின் காங்கிரஸ் தலைவரான நவ்ஜோத் சிங்கிற்கு முன் வந்தார். ஆனால் காங்கிரஸ் தலைமை அவருக்கு முதல்வர் பதவியை தராமல் சரண்ஜித் சன்னிக்கு முதல்வர் பதவியை தந்தது. இச் சம்பவம் மக்கள் மத்தியில் விமர்சனத்தையும், வரவேற்பையும் பெற்றது.
இந்நிலையில் அடுத்த மாதம் பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் வேட்பாளர் யார் என்று கேள்வி எழுந்துள்ளது. அதற்கு சரண்ஜித் சன்னி “இப்போது தான் நான் முதல்வர்” என்று தெரிவித்தார். அவர் சொன்னது போலவே தற்போது காங்கிரஸ் தலைமை பஞ்சாபில் யார் முதலமைச்சர் என்று தெரிவித்துள்ளது.அதன்படி சரண்ஜித் சிங் சன்னி தான் முதல்வர் வேட்பாளர் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.