அந்த ஆயுதத்தை முழுசா பயன்படுத்துங்க… பாஜக வேட்பாளர்களுக்கு அண்ணாமலை ஆர்டர்!

மக்களை எளிதில் சென்றடைய ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களை முழுமையாக பயன்படுத்திக்கொள்ளும் படி பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அக்கட்சியின் மாநிலத் தலைவர் தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தியுள்ளார்.

நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவை பாஜக மாநகர், மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் வடவள்ளியில் இன்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பேசிய அண்ணாமலை: தேர்தல் பிரச்சாரத்திற்கு நமக்கு 11 நாட்கள் மட்டுமே உள்ளது. எனவே கடினமாக உழைத்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும்.

நகர்ப்புறங்களில் உள்ள வாக்காளர்களை கவர இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம் மேற்கொள்ளுங்கள். மக்களை எளிதில் சென்றடைய உங்களது கையில் உள்ள செல்போன் சிறந்த ஆயுதம் காரில் செல்லும்போது கூட செல்போனில் மக்களிடம் பேசுங்கள். ஒருநாளும் மக்களோடு பேசாமல் இருக்க வேண்டாம். ஊரின் முக்கிய தலைவர்கள், சமூகத்தில் முக்கிய தொண்டாற்றியவர்கள், முக்கியப் பொறுப்புகளில் இருப்பவர்கள் என தினமும் 50 முதல் 100 பேரிடம் பேசுங்கள் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.