இன்னமும் நீங்க திருந்தலையா?… ஓபிஎஸ் செயலால் தொண்டர்கள் அதிர்ச்சி!

அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு ஆண்மை கிடையாது, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி என பாஜக அடுத்தடுத்து அதிமுகவை மட்டம் தட்டி வரும் நிலையில், பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை கடும் கண்டனத்தை உருவாக்கியுள்ளது.

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாஜக அலுவலகம் மீதான பெட்ரோல் குண்டு வீச்சிற்கு அதிமுக சார்பில் எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் கொடூரத் தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாகக் கண்டுபிடித்து, அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழாவண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டுமென்றும் முதல்வரை கேட்டுக் கொள்கிறேன் என வலியுறுத்தியுள்ளார்.

கடந்த மாதம் நயினார் நாகேந்திரன் சட்டமன்றத்தில் ஆண்மையுடன் பேச ஒரு அதிமுக எம்.எல்.ஏ. கூட இல்லை என பேசியது அதிமுகவினரை இன்றளவும் கொந்தளிப்பில் வைத்துள்ளது. வர உள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் பாஜக தனித்து போட்டியிட என அறிவித்ததை கண்டு அதிர்ச்சியான அதிமுகவினரை விட, சோசியல் மீடியாவில் கொண்டாடி தீர்த்தவர்களே அதிகம். இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த கண்டன அறிக்கை, அதிமுகவினரை கடுப்பில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

கடலூரில் கொட்டி தீர்த்த கன மழையால் வாழை மரங்கள் சேதம்: இழப்பீடு வழங்க வேல்முருகன் கோரிக்கை !!

தமிழகத்தில் நெல் சாகுபடிக்கு அடுத்தப்படியாக அதிகமாக பயிரிடப்படுவது வாழையாகும். இந்தியாவிலேயே அதிகப்படியாக வாழை…