உயர்ந்த மனிதர்களை கட்சியில் இணைக்கும் பாஜக

the_great_khali_in_bjp_TNL

தி கிரேட் காளி என்று அழைக்கப்படும் பிரபல மல்யுத்த வீரர் தலிப் சிங் ராணா, பாஜகவில் இணைந்துள்ளார்.ராஜ்யசபா எம்பி அருண் சிங், இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் மற்றும் மக்களவை எம்பி சுனிதா துக்கல் முன்னிலையில் அவர் கட்சியில் இணைந்தார்.

இதுகுறித்து அவர் தெரிவித்தது , “பாஜகவில் இணைந்தது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. தேசத்துக்காக பிரதமர் மோடி பணியாற்றுவதைப் பார்க்கும்போது, அவர்தான் சரியான பிரதமர் என எண்ணுகிறேன். அதனால்தான் ஏன் பாஜகவில் சேரக்கூடாது, தேசத்தின் வளர்ச்சிக்காக உழைக்கக்கூடாது என்று எண்ணினேன். பாஜகவின் தேசியக் கொள்கையால் ஈர்க்கப்பட்டு நான் பாஜகவில் இப்போது இணைந்துவிட்டேன்”  என்று கூறினார்.

கடந்த 2019-ம் ஆண்டு பாஜக அரசு கொண்டவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வந்தபோது, அங்கு சென்ற தி கிரேட் காளி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக கருத்துக்களைத் தெரிவித்து பாஜகவை விமர்சித்தார். அதுமட்டுமல்லாமல் விவசாயிகளின் விளைப் பொருட்களை மத்தியஅரசு அதிக விலைக்கு கொள்முதல் செய்ய வேண்டும், மத்தியஅரசின் வேளாண் சட்டத்தால், சாலை ஓர வியாபாரிகள், தினக்கூலிகள் எனப் பலரும் பாதிக்கப்படுவார்கள் “ என விமர்சித்தார்.இந்நிலையில், அதிர்ச்சியளிக்கும் வகையில் பாஜகவில் இன்று தி கிரேட் காளி இணைந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

ஊடகத்துறையினரை ஊக்குவித்த மா.சுப்பிரமணியன்… என்ன சொன்னார் தெரியுமா?

சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்ற ஊடகவியாளர்களுக்கான கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு…