கோலாகலமாக தொடங்கிய தேர்தல் : கோவா, உத்தரகாண்ட் வாக்குப்பதிவு தொடங்கியது

ஏற்கனவே உத்தர பிரதேச மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று கொண்டிருந்த நிலையில் தற்போது கோவா, உத்தரகாண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெற்று கொண்டிருக்கிறது.அதன்படி 

கோவாவில் ஒரே கட்டமாக நடக்கும் தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிவசேனா, திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தனித்து களமிறங்கி உள்ளதால் கடும் போட்டி நிலவுகிறது.

கோவாவில் இன்று காலை 9 மணி நிலவரப்படி 11.04 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன, அதே நேரத்தில் உத்தரப் பிரதேசம் மற்றும் காலை 9 மணி வரை 9.45 சதவீதமும், உத்தரகாண்டில்  5.15 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. கோவா மற்றும் உத்தரபிரதேசத்தின் 55 தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது, அதேபோல உத்தரகண்டில் காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.

சுமார் 11 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்களைக் கொண்ட கடலோர மாநிலமான கோவாவில் 40 சட்டமன்றத் தொகுதிகளில் 301 வேட்பாளர்களும், 81 லட்சம் வாக்காளர்களைக் கொண்ட உத்தரகண்டில் 152 சுயேச்சைகள் உட்பட 632 வேட்பாளர்களும் 70 தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.

உத்தரபிரதேசத்தின் 11 மாவட்டங்களில் உள்ள 58 சட்டமன்ற தொகுதிகளுக்கு வியாழக்கிழமை நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவில் 60 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வாக்குப்பதிவு நடைபெற்ற தொகுதிகளில் ஷாம்லி மாவட்டத்தில் உள்ள கைரானா தொகுதியில் அதிகபட்சமாக 75 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இன்று பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன, சஹாரன்பூர், பிஜ்னோர், மொராதாபாத், சம்பல், ராம்பூர், அம்ரோஹா, புடான், பரேலி மற்றும் ஷாஜஹான்பூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 55 தொகுதிகளில் 586 வேட்பாளர்கள் இந்த கட்டத்தில் போட்டியிடுகின்றனர். “நகினா, தாம்பூர், பிஜ்னோர், அஸ்மோலி, சம்பல், தியோபந்த், ராம்பூர் மணிஹரன் மற்றும் கங்கோஹ் ஆகிய 8 சட்டமன்றத் தொகுதிகள் ‘சென்சிட்டிவ்’ பிரிவில் இடம் பெற்றுள்ளன” என்று உ.பி காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

கடலூரில் கொட்டி தீர்த்த கன மழையால் வாழை மரங்கள் சேதம்: இழப்பீடு வழங்க வேல்முருகன் கோரிக்கை !!

தமிழகத்தில் நெல் சாகுபடிக்கு அடுத்தப்படியாக அதிகமாக பயிரிடப்படுவது வாழையாகும். இந்தியாவிலேயே அதிகப்படியாக வாழை…