அதிருப்தியில் மக்கள்… சென்னையில் திமுகவுக்கு சரிவா?

சென்னை மாநகராட்சி தேர்தலையொட்டி தி.மு.க.,வினர் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர். அதேபோல் கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுப்பட்டு அமர்களம் செய்து வருகின்றனர். ஆனால், எதிர் கட்சியான அ.தி.மு.க., ஒரு சில இடங்களில் தவிர மற்ற இடங்களில் மந்தமான நிலையிலேயே பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். தி.மு.க.,வுக்கும் ஈடு கொடுக்கும் அளவுக்கு அதிமுக.,வினரின் பிராச்சாரம் இல்லை.
இந்நிலையில் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய், நகைக் கடன் தள்ளுபடி, கல்விக் கடன் தள்ளுபடி, நீட் போன்றவற்றை திமுக அரசு ஏமாற்றி வருகிறது என அதிமுக பிரச்சாரம் செய்தாலும் மக்களிடம் அவ்வளவுவாக எடுப்படவில்லை.
இந்த நிலையில் திமுக பல இடங்களில் தோல்வி அடையும என உளவுத் துறை சொல்லி இருப்பதாக தற்போது வாய்மொழியாக பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையில் உள்ள அடித்தட்டுமக்கள் கடந்த சட்டசபை தேர்தலில் திமுக.,வுக்கு வாக்கு அளித்து இருந்தாலும் சிலர் மனமாற்றம் ஏற்பட்டு இருப்பது உண்மை. அதன் காரணமாக சென்னையில் ஒரு சில இடங்கள் தி.மு.க., இழக்க வாய்ப்பு உள்ளது என தெரிகிறது.