நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: அமைச்சர்கள் வாக்களிப்பு!

Election

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தங்களது வார்டுகளுக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் அமைச்சர்கள் குடும்பமாகவும், தனியாகவும் வந்து வாக்குசெலுத்தினர்.

திருச்சி தில்லைநகர் மக்கள் மன்றத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு வாக்களித்தார். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி கிராப்பட்டி சிறுமலர் மேல்நிலைப்பள்ளியில் தனது தாயாருடன் சென்று வாக்களித்தார். தூத்துக்குடியில் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் குடும்பத்துடன் வரிசையில் நின்று வாக்களித்தார். பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆவடி மாநகராட்சியில் 39வது வார்டுக்குட்பட்ட வாக்குச்சாவடியில் இருசக்கர வாகனத்தில் சென்று வாக்களித்தார். சென்னை கிண்டி லேபர் காலனியில் லையன்ஸ் கிளப் பள்ளியில் மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் வாக்களித்தார்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பேரூராட்சி 6வது வார்டுக்குட்பட்ட ஊராட்சி தொடக்கப்பள்ளியில் இருந்த வாக்குச்சாவடியில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் குடும்பத்துடன் சென்று ஜனநாயக கடமையாற்றினார். ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தாராபுரம் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் தனது ஜனநாயக கடமையாற்றினார்.

புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட 27வது வார்டில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் இருந்த வாக்குச்சாவடியில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இருசக்கர வாகனத்தில் சென்று வாக்கு செலுத்தினார். நீர்வளத்துறை அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் காட்பாடி காந்திநகரில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு வாக்குச்சாவடியில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார். விழுப்புரம் சண்முகநகர் 36வது வார்டுக்கான வாக்குச்சாவடியில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி குடும்பத்தாருடன் சென்று வாக்களித்தார். ஊரகதொழில்துறை அமைச்சர் த.மோ.அன்பரசன் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரிலும், மதுரை ஐயர்பங்களாவில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தியும் வாக்களித்தனர்.

Leave a Reply

Your email address will not be published.

நெருக்கடி நிலைக்கு இம்ரான் கான் அரசே காரணம் – பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் இருந்த நிலையில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்…