திமுக கூட்டணி எத்தனை இடங்களில் வெற்றி பெற்றுள்ளது தெரியுமா?

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றியை பதிவு செய்துள்ளது. அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றியுள்ள திமுக கூட்டணி, 95 சதவீத நகராட்சி மற்றும் பேரூராட்சிகளை கைப்பற்றியுள்ளது.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த 19ம் தேதி தேர்தல் நடைபெற்று வாக்கு எண்ணிக்கையானது பிப்ரவரி 22 அன்று 268 மையங்களில் எண்ணப்பட்டது. இத்தேர்தலில் 60.70% வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்த வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியான நிலையில், திமுக கூட்டணி மாஸ் வெற்றியை பதிவு செய்துள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 4,388 பேரூராட்சி வார்டுகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 1,206 வார்டுகளிலும், காங்கிரஸ் 368 வார்டுகளிலும், சிபிஐ 26 மற்றும் சிபிஎம் 101 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக 230 வார்டுகளிலும், சுயேட்சைகள் 981 வார்டுகளிலும், மற்றவை 271 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு நடத்தப்பட்ட தேர்தலில், 2360 வார்டுகளை திமுக தட்டித்தூக்கியுள்ளது. அதிமுக- 638, பி.எஸ்.பி – 3, பாஜக – 56, சிபிஐ – 19, சி.பி.ஐ(எம்) -41, தே.மு.தி.க – 12, காங்கிரஸ் – 151 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
மாநகராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு நடைபெற்ற தேர்தலில், திமுக 951 இடங்களிலும், அதிமுக 164 இடங்களிலும், பாஜக 22 இடங்களிலும் வெற்றி வாகை சூடியுள்ளது. காங்கிரஸ் 73 வார்டுகளிலும், சி.பி.ஐ 13 மற்றும் சி.பி.ஐ(எம்) 24 வார்டுகளிலும்,பிற கட்சிகள் 125 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளது.