பாஜகவின் பொய் உருட்டுகள் அம்பலம்… வெளியானது பகீர் உண்மை!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மொத்த வாக்குகளில் தமிழ்நாடு பாஜக 5.33% வாக்குகளை பெற்றுள்ளதாக தமிழக பாஜகவின் சூர்யா, காயத்ரி ரகுராமன் உள்ளிட்டோர் ட்விட்டரில் பொய்யாக வதந்தி பரப்பி வருவது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி, 2022-ல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், பாஜக சார்பில் மாநகராட்சி வார்டு உறுப்பினராக 22 (மொத்த எண்ணிக்கை : 1374 ), நகராட்சி வார்டு உறுப்பினராக 56 (மொத்த எண்ணிக்கை : 3843 ) , பேரூராட்சி வார்டு உறுப்பினராக 230 (மொத்த எண்ணிக்கை : 7621 ) பேர் வெற்றி பெற்றுள்ளார்கள்.

2022-ல் தமிழ்நாடு மாநகராட்சி வார்டு உறுப்பினர்களில் 1.60%, நகராட்சி வார்டு உறுப்பினர்களில் 1.46% , பேரூராட்சி வார்டு உறுப்பினர்களில் 3.02% பேர் பாஜகவைச் சேர்ந்தவர்கள். மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி என மொத்தமுள்ள 12,838 வார்டுகளில் 308 வார்டு உறுப்பினர்களை பாஜக பெற்றுள்ளது. இது 2.39 சதவீதமாகும்.

பாஜக வெற்றிப் பெற்ற 230 பேரூராட்சி வார்டு உறுப்பினர்களில் 168 பேர்(73%) கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து வென்றுள்ளனர். அதேபோல், 56 நகராட்சி வார்டு உறுப்பினர்களில் 21 பேர் (37.5%) மற்றும் 22 மாநகராட்சி வார்டு உறுப்பினர்களில் 11 பேர் (50%) கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களே. 2022 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற 200 வார்டுகள் (64.9%) கன்னியாகுமரி எனும் ஒரு மாவட்டத்தைச் சார்ந்தே இருக்கிறது.

சுமார் 11 ஆண்டுகளுக்கு முன்பாக 2011-ல் தமிழ்நாட்டில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் குறித்து தமிழ்நாடு தேர்தல் ஆணையம் இனையதளத்தில் வெளியிட்ட தரவுகளின் படி, ” மொத்தமுள்ள 12,816 வார்டுகளில்(தலைவர்கள் & ஊராட்சித் தவிர்த்து) மாநகராட்சி 04 , நகராட்சி 37 மற்றும் பேரூராட்சி 185 என மொத்தம் 226 வார்டு உறுப்பினர்களை பாஜக பெற்றிருந்தனர். இது 1.76 சதவீதமாகும்.

2011 மற்றும் 2022 ஆகிய இரு தேர்தல்களிலும் தமிழக பாஜக தனித்து நின்றே தேர்தலை சந்தித்து இருக்கிறது. இரு தேர்தல் வெற்றி சதவீதத்தை ஒப்பிடுகையில், 1.76%-ல் இருந்து 2.39% என பாஜக 0.63% மட்டுமே வளர்ச்சியை கண்டுள்ளது. பாஜக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 3 சதவீதம் வாக்கு வாங்கியது, 5.33 சதவீதம் வாக்கு வாங்கியது என எந்த தரவுளின் அடிப்படையில் தெரிவித்து வருகிறார்கள் எனத் தெரியவில்லை.

Leave a Reply

Your email address will not be published.