BREAKING ஜெயக்குமாருக்கு அடுத்தடுத்து சிக்கல்… கூண்டோடு சிக்கிய குடும்பம்!

Jayakumar

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது 6 பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

அதிமுக முன்னாள் அமைச்சர் 5 கோடி மதிப்பிலான தொழிற்சாலையை அபகரித்ததாக கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மகேஷ் என்பவருக்கு சொந்தமான 8 கிரவுண்ட் ஆலையை மிரட்டி அபகரித்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்திருந்தார்.

இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அவரது மகள் ஜெயப்பிரியா, மருமகன் நவீன் ஆகியோர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. கொலை மிரட்டல் விடுதல், அத்துமீறி நுழைதல், கொடுங்காயம் ஏற்படுத்துதல், கொள்ளையடித்தல், குற்றச்சதி ஏற்படுத்துதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 19ம் தேதி சென்னை ராயபுரம் பகுதியில், திமுக பிரமுகர் ஒருவர் கள்ள ஓட்டு செலுத்த வந்ததாக கூறி, அ.தி.மு.கவினர் பலர் அந்த திமுக நபரை அரைநிர்வாணமாக்கி தாக்கும் வீடியோ வெளியாகி சோசியல் மீடீயாவில் வைரலானது. சென்னை தண்டையார்பேட்டை காவல்துறையினர் ஜெயக்குமார் உட்பட 40 பேர் மீது சட்ட விரோதமாகக் கூடி கலகம் செய்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இதனையடுத்து பிப்ரவரி 22ம் தேதி இரவு கைது செய்யப்பட்ட ஜெயக்குமார், இந்த வழக்கில் 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். ஜெயக்குமார் கைதைக் கண்டித்து அன்றைய தினம் அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக தொற்று நோய் தடுப்பு சட்டத்தின் கீழ் ஜெயக்குமாரை சென்னை காவல்துறை கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published.