பெரியார் வேடமிட்ட குழந்தைகள் மீது கொலைவெறி… சர்ச்சை ஆசாமியை தட்டித்தூக்கிய போலீஸ்!

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பெரியார் வேடமணிந்து நடித்த குழந்தைகளுக்கு எதிராக வன்முறையை தூண்டும் விதமாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரபல தொலைக்காட்சியில் குழந்தைகளின் தனித்திறமைகளை வெளிக்கொண்டு வரும் விதமாக நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பாகி வருகிறது. அதில் குழந்தைகள் தங்களுக்கு விருப்பமாக கதாபாத்திரங்களில் காமெடி மற்றும் கருத்துள்ள வகையில் நடித்து வருகின்றனர். கடந்த ஜனவரி மாதம் இந்த தொலைக்காட்சியில் இதே நிகழ்ச்சியில் இம்சை அரசன் 23ம் புலிகேசி வேடத்தில் நடித்த குழந்தைகள் இருவர் பிரதமர் மோடியை அவமதித்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் கடந்த வாரம் தந்தை பெரியார் வேடமணிந்து சிறுவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதுகுறித்து ட்விட்ட்ரில் பதிவிட்டிருந்த நபர், தந்தை பெரியார் வேடமணிந்து நடித்த குழந்தைகளை அடித்து கொன்று, பொது இடத்தில் தூக்கில் தொங்க விட வேண்டும்” என கொலைமிரட்டல் விடுக்கும் விதமாக பதிவிட்டிருந்தார்.

இந்த ட்விட்டர் ஸ்கிரின் ஷார்ட் சோசியல் மீடியாவில் வைரலானதை அடுத்து, அந்த நபரை கைது செய்ய வேண்டுமென புகார்கள் எழுந்தது. இந்நிலையில் குழந்தைகளுக்கு எதிராக வன்முறையை தூண்டிவிடும் வகையில் சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த வெங்கடேஷ் குமார் பாபு என்பவர் கயத்தாறு போலீசாரால் கைது செய்யப்பட்டார். பீதி ஏற்படுத்துதல், சட்ட ஒழுங்கை சீர் குலைத்தல் போன்ற பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்ட வெங்கடேஷ் குமார் பாபு, கோவில்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

நெருக்கடி நிலைக்கு இம்ரான் கான் அரசே காரணம் – பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் இருந்த நிலையில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்…