ஸ்டாலின் அண்ணா நீங்க அடுத்து இதை செஞ்சே ஆகனும்… விடாப்பிடியாக கோரிக்கை வைத்த ராகுல்!

முதல்வர் மு.க.ஸ்டாலின் வயதை காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி கூகுளில் தேடியதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தனது வாழ்க்கை வரலாறு குறித்து, “உங்களில் ஒருவன்” என்ற புத்தகத்தை எழுதி உள்ளார். இந்த புத்தகத்தின் முதல் பாகத்தை வெளியிடும் நிகழ்ச்சி, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்றது.

இதில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சித் தலைவரும், பீகார் மாநில எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ், ஜம்மு – காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும், தேசிய மாநாட்டு கட்சித் தலைவரும் ஒமர் அப்துல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் விழாவில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஸ்டாலின் வயது பற்றி பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது. அண்ணன் மு.க.ஸ்டாலினை பாராட்டுகிறேன், இந்தப் புத்தகத்தை எழுதியதற்காக. அவருடைய வாழ்க்கை நீண்ட நெடிய போராட்டம். பல ஆண்டுகள் அந்தப் போராட்டத்தில் அவர் ஈடுபட்டதோடு, தமிழக மக்களுக்கு ஏராளமான நன்மைகள் செய்து வருவதற்காக, நான் அவரை, பாராட்டக் கடமைப்பட்டிருக்கின்றேன் எனத் தெரிவித்தார்.

நேற்று எனது அம்மா என்னை அழைத்து நாளை மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் என்று கூறினார். நான், எனக்கு தெரியும் எனக்கூறி விட்டு, அவருக்கு எத்தனை வயது என்று தெரியுமா என கேட்டேன். அதற்கு அவர் தெரியாது என்று கூறினார். அவருக்கு வயது 69 என்றேன், உடனே எனது தாயார், ’சாத்தியமே இல்லை’ என்று கூறினார். அவருக்கு எத்தனை வயதிருக்கும் என நீங்கள் கருதுகிறீர்கள் என நான் கேட்டேன். அதற்கு அவர், ’50 அல்லது 60 அதற்குள்ளாகத்தான் இருக்கும்’ என்று கூறினார். நான் அப்படி கூறியவுடன் எனது தாயார், கூகுளில் அந்தத் தகவலை ஒப்பிட்டுப் பார்த்து, ’நான் சொன்னது சரிதான்’ என ஒத்துக்கொண்டார். இந்தப் புத்தகத்தில் அது இருக்கிறதா, இல்லையா என தெரியாது. அவர் இன்னொரு புத்தகம் எழுத வேண்டும், அவர் எப்படி இவ்வளவு இளமையாக இருக்கிறார் என்பது குறித்து என கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

கடலூரில் கொட்டி தீர்த்த கன மழையால் வாழை மரங்கள் சேதம்: இழப்பீடு வழங்க வேல்முருகன் கோரிக்கை !!

தமிழகத்தில் நெல் சாகுபடிக்கு அடுத்தப்படியாக அதிகமாக பயிரிடப்படுவது வாழையாகும். இந்தியாவிலேயே அதிகப்படியாக வாழை…