உதய் கரெக்டா?… ராகுல் பற்றி பேசியதை கன்பார்ம் செய்த சத்யராஜ்!

Sathiyaraj

திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தனது வாழ்க்கை வரலாறு குறித்து, “உங்களில் ஒருவன்” என்ற புத்தகத்தை எழுதி உள்ளார். இந்த புத்தகத்தின் முதல் பாகத்தை வெளியிடும் நிகழ்ச்சி, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்றது.

இதில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சித் தலைவரும், பீகார் மாநில எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ், ஜம்மு – காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும், தேசிய மாநாட்டு கட்சித் தலைவரும் ஒமர் அப்துல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் விழாவில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சத்தியராஜ், நாடாளுமன்றத்தில் தமிழர்களுக்காக சிங்கம் போல கர்ஜித்த ராகுல்காந்திக்கு நன்றி தெரிவிப்பதாகவும், திராவிட மாடல்படி, ராகுல்காந்தியை தம்பி என அழைக்க விரும்புவதாகவும் தெரிவித்தார். தமிழ்நாட்டிற்கு மிக சிறந்த முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக கூறிய அவர், திராவிட இயக்க தலைவர்கள் தியாகக் குணம் கொண்டவர்கள் என்றும் கூறினார். சமூகநீதியும், பொருளாதார நீதியும் இணைந்தது தான் திராவிட மாடல் என்றும் நடிகர் சத்தியராஜ் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.