நெருப்புடா… ஸ்டாலின் பிறந்த நாளில் மாஸ் காட்டிய கோவை திமுக!

முதல்வர் மு.க.ஸ்டாலினின் 69வது பிறந்தநாளை முன்னிட்டு கோவை முழுவதும் ஒட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட போஸ்டர் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

தமிழக முதல்வர் ஸ்டாலின் உடைய 69வது பிறந்தநாள் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. திமுக உடன்பிறப்புகள் ஸ்டாலின் பிறந்தநாளை தமிழகம் முழுவதும் தடபுடலாக பல்வேறு வகையில் கொண்டாடி வருகின்றனர். அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலகினர் என பல்வேறு துறை பிரபலங்களும் முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கோவை திமுக சார்பில், நெருப்புடா நெருங்குடா பார்ப்போம் என கோவை ரயில் நிலையம், லங்கா கார்னர் உள்ளிட்ட பகுதிகளில் திமுகவினர் ஒட்டியிருக்குற பிரம்மாண்ட போஸ்டர் வைரலாகி வருகிறது.

அந்த போஸ்டரரில் மு.க.ஸ்டாலின் குழந்தையா இருக்குறதுல இருந்து, அவர் அம்மா அப்பா மற்றும் ப்ரெண்ட்ஸ் கூட எடுத்துக்கிட்ட போட்டோஸ், அவரோட மனைவி மற்றும் குழந்தைகள் கூட எடுத்துக்கிட்ட போட்டோஸ், ஸ்டாலின் நடித்த சினிமாபடத்தோட போட்டோ, கட்சி மற்றும் அரசியல் அவர் பகித்த பதவிகள், அவர் உடைய சாதனைகள், போராட்டங்கள், குடும்ப நிகழ்வுகள் என பல பரிமாணங்கள் கொண்ட 70 புகைப்படங்கள் இடம் பெற்றிருக்கு. மேலும் நெருப்புடா… தமிழகத்தை நெருங்குடா பார்க்கலாம் என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

Leave a Reply

Your email address will not be published.

vaaitha

நாங்க அதுக்காக அழையுறமா?… ‘வாய்தா’-வுக்கு எதிராக கொந்தளித்த வழக்கறிஞர்கள்!

வாய்தா என்ற திரைப்படத்திற்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது….