குடும்பத்துடன் குதூகலமாக கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ஸ்டாலின்… வைரல் போட்டோஸ்!

முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது 69வது பிறந்தநாளை முன்னிட்டு குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடிய போட்டோஸ் வைரலாகி வருகிறது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் 69வது பிறந்தநாள் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. திமுக உடன்பிறப்புகள் ஸ்டாலின் பிறந்தநாளை தமிழகம் முழுவதும் தடபுடலாக பல்வேறு வகையில் கொண்டாடி வருகின்றனர். அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலகினர் என பல்வேறு துறை பிரபலங்களும் முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். காலை கோபாலபுரம் இல்லத்திற்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு தாயார் தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றார்.

தனது பிறந்தநாளை முன்னிட்டு மெரினாவில் உள்ள கலைஞர் கருணாநிதி, அறிஞர் அண்ணா நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பெரியார் திடலுக்குச் சென்ற முதல்வர், ஸ்டாலின் பெரியார் நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து மகன் உதயநிதி ஸ்டாலின், மருமகள் கிருத்திகா, மனைவி துர்கா ஸ்டாலின், மகள் செந்தாமரை, மருமகன் சபரிசன், பேரக்குழந்தைகள் உள்ளிட்டோருடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினார்.

Leave a Reply

Your email address will not be published.