சூடு பிடிக்கும் “மறைமுகத் தேர்தல்”.. வேட்பாளர்களை அறிவித்த ‘திமுக’.. லிஸ்ட் இதோ!

தற்போது திமுக சார்பில் தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளில் 20 மாநகராட்சிகளில் போட்டியிட உள்ளதாக வேட்பாளர்களின் பட்டியலை திமுக அறிவித்துள்ளது. 340 வருட சென்னை மாநகராட்சி வரலாற்றில் திமுக சார்பில் இளம் வயது மேயர் வேட்பாளராக பிரியா களமிறங்க உள்ளார். சென்னை மாநகராட்சியின் துணை மேயராக மகேஷ் குமார் அறிவிக்கப்பட்டுள்ளார்.

கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கு 19வது வார்டில் வெற்றி பெற்ற திமுக மாமன்ற உறுப்பினர் கல்பனாவையும், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் சொந்த வார்டான 92வது வார்டில் வென்ற வெற்றிச்செல்வன் துணை மேயர் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

சேலம் மாநகராட்சியில் ஏ.ராமச்சந்திரன் மேயர் பதவிக்கும், துணை மேயர் பதவிக்கு தினேஷ் குமாரும் போட்டியிட உள்ளனர். ஈரோடு மாநராட்சி மேயர் பதவிக்கு நாகரத்தினமும், துணை மேயர் பதவிக்கு செல்வராஜும் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவிக்கு அமைச்சர் கீதாஜீவன் சகோதரர் என்.பி.ஜெகன், துணை மேயர் பதவிக்கு ஜெனிட்டா செல்வராஜ் போட்டியிட உள்ளனர். திருச்சி மாநகராட்சி மேயர் பதவிக்கு அன்பழகனும், துணை மேயர் – திவ்யா தனக்கோடியும் போட்டியிட உள்ளனர்.

நெல்லை மாநகராட்சி மேயர் பதவிக்கு பி.எம்.சரவணன்,
துணை மேயர் பதவிக்கு கே.ஆர்.ராஜு போட்டியிட உள்ளனர். ஆவடி மாநகராட்சி மேயர் வேட்பாளராக ஜி.உதயகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார்.

தாம்பரம் மாநகராட்சி மேயர் பதவிக்கு வசந்தகுமாரி கமலக்கண்ணன், துணை மேயர் பதவிக்கு ஜி.காமராஜ் போட்டியிட உள்ளனர். காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் பதவிக்கு மகாலட்சுமி யுவராஜ், கடலூர் மாநகராட்சி மேயர் பதவிக்கு சுந்தரியும் போட்டியிட உள்ளனர்.

வேலூர் மாநகராட்சி மேயர் பதவிக்கு சுஜாதா அனந்தகுமார், துணை மேயர் பதவிக்கு சுனில் ஆகியோர் களமிறக்கப்பட்டுள்ளனர். தஞ்சை மாநகராட்சியில் மேயர் பதவிக்கு சண். ராமநாதனும், துணை மேயர் பதவிக்கு அஞ்சுகம் பூபதியும் போட்டியிடுகின்றனர்.

கும்பகோணம் மாநகராட்சியில் துணை மேயர் பதவிக்கு மட்டும் தமிழழகன் போட்டியிடுகிறார். கரூர் மாநகராட்சி மேயர் பதவிக்கு கவிதா கணேஷன், துணை மேயர் பதவிக்கு தாரணி P.சரவணன் போட்டியிட உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.

vaaitha

நாங்க அதுக்காக அழையுறமா?… ‘வாய்தா’-வுக்கு எதிராக கொந்தளித்த வழக்கறிஞர்கள்!

வாய்தா என்ற திரைப்படத்திற்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது….