#BREAKING சொந்த தம்பிக்கே ஆப்பு வைத்த ஓபிஎஸ்… இபிஎஸ் உடன் கூட்டாக வெளியிட்ட அறிவிப்பு!

O Raja

தூத்துக்குடியில் நேற்று சசிகலாவை சந்தித்த ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா உள்ளிட்டோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

சசிகலா மற்றும் தினகரை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என கடந்த சில தினங்களுக்கு முன்பு தேனி அதிமுக உறுப்பினர்கள் கூட்டத்தில் தீர்மானம் நடைபெற்றது. இந்த கூட்டம் பெரியகுளத்தில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்தில் நடைபெற்றதால், அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பான தீர்மானம் ஓபிஎஸ் வசம் ஒப்படைக்கப்பட்டதாகவும், அவர் தொண்டர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவேன் என வாக்குகொடுத்ததாகவும் தேனி நிர்வாகிகள் தெரிவித்தது அதிமுகவில் சலசலப்பை உருவாக்கியது.

இந்நிலையில் நேற்று திடீரென்று சசிகலா தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள ஆரம்பித்துள்ளார். தூத்துக்குடியில் அவர் தங்கியிருந்த ஓட்டலில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜாவுடன் திடீர் சந்திப்பு நடைபெற்றது. ஏற்கனவே சசிகலாவுக்கு ஆதரவாகவோ, அவருடன் தொடர்பிலோ இருக்கும் நபர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதிமுகவின் தலைமை ஒருங்கிணைப்பாளரின் சகோதரரான ஓ.ராஜா கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டது அதிமுகவில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது. சசிகலாவை சந்தித்த ஓ.ராஜா உள்ளிட்ட 4 பேரை கட்சியில் இருந்து நீக்கி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அதில், கட்சியின் கொள்ளை மற்றும் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கம், அவப்பெயர் உண்டாக்கும் வகையில் நடந்து கொண்டதால் தேனி மாவட்ட ஆவின் தலைவர் ஓ.ராஜா, மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர் எஸ்.முருகேசன், மாவட்ட மீனவர் பிரிவுச் செயலாளர் வைகை.கருப்புஜி, கூடலூர் நகர புரட்சித் தலைவி பேரவைச் செயலாளர் எஸ்.சேதுபதி ஆகியோர் இன்று முதல் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

vaaitha

நாங்க அதுக்காக அழையுறமா?… ‘வாய்தா’-வுக்கு எதிராக கொந்தளித்த வழக்கறிஞர்கள்!

வாய்தா என்ற திரைப்படத்திற்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது….