திமுக வீட்டு திருமணம்… ஓபிஎஸ் முதல் டிடிவி வரை ஒரே மேடையில் திரண்ட தலைவர்கள்!

சென்னையில் திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் மகள் நித்திலாவுக்கும், திமுக பிரமுகர் டாக்டர் மகேந்திரனின் மகன் கீர்த்தனுக்கும் திருமணம் நடைபெற்றது. திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த திருமண நிகழ்ச்சியில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பாஜக பிரமுகரும், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகனான ராம்குமார், ராதிகா சரத்குமார் உள்ளிடோர் பங்கேற்றனர்.









