சென்னையிலிருந்து செங்கல்பட்டுக்கு அனுப்பிவைத் செம்மலே… முதல்வரை பங்கமாய் கலாய்த்த அண்ணாமலை!

Annamalai

உக்ரைனில் சிக்கிய தமிழக மாணவர்களை மீட்பதற்காக நாடாளுமன்ற எம்.பி.க்கள் அடங்கிய கண் துடைப்பு குழுவை முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுப்பி வைத்ததாக பாஜக மாநில தலவர் அண்ணாமலை கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

கடமையுணர்வுடன், மனிதாபிமான அடிப்படையில் செயல்பட்டு சாதித்துகாட்டிய பாரதப் பிரதமரும் தமிழக அரசின் கண்துடைப்பு மீட்புக்குழுவும் எங்க ஊரு பக்கத்துல வேடிக்கையான ஒரு கதை சொல்லுவாங்க, நான் தவுடு எடுத்துட்டு வரேன்… நீங்க அரிசி எடுத்துட்டு வாங்க… இரண்டையும் கலந்து, புடைச்சு சுத்தம் பண்ணி சாப்பிடலாம் என்பது தான் தற்போது இதைத்தான் தமிழக அரசு செய்து கொண்டிருக்கிறது…, அதாவது மத்திய அரசின் அரிசியுடன், தன் தவுடைக் கலந்து, தமிழ் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது.

உதாரணத்திற்காக சொல்ல வேண்டுமென்றால், சமீபத்தில் உக்ரேனின் உள்ள மாணவர்களை மீட்க மாநில அரசின் சார்பில் ஒரு சிறப்புப் பிரிவை உருவாக்கினர்.தமிழக முதல்வரின் பெயரைக் கேட்டவுடன், ரஷ்ய அதிபர் புடினும், உக்ரைன் நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கியும், பயந்து மிரண்டு தமிழக மாணவர்களை அனுப்பி வைத்தார்கள் என்று ஒரு செய்தி முரசொலியில் வந்திருக்கிறது

உண்மையில் இரு நாட்டு அதிபர்களும் தமிழக முதல்வரின் பெயரை கேட்டிருந்தால் என்ன செய்திருப்பார்கள் என்று என்னால் எண்ணிப் பார்க்கக்கூட முடியவில்லை.போர் தொடங்குவதற்கு முன்பாகவே மத்திய அரசு ஆபரேஷன் கங்கா திட்டத்தை திட்டமிட்டு அறிவித்து செயல்படுத்தி தொடங்கிவிட்டது.

உக்ரைனில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் தாய்நாடு திரும்ப சுற்றறிக்கையை அனுப்பி விட்டது. இலவச விமானங்கள் மூலம் மத்திய அரசு மாணவர்களை கட்டணமில்லாமல் மீட்டு ஆறாவது விமானம் இந்தியா வந்த பிறகு, தமிழக மாணவர்களின் பயண கட்டணத்தைத் தாம் அளிப்பதாக தமிழக முதல்வர் அறிக்கை விடுகிறார்.

மத்திய அரசு ஆப்ரேஷன் கங்கை திட்டத்தின் மூலம் பாதுகாப்பாக அனைவரையும் அழைத்து வந்து கொண்டிருக்கும்போது இதுபோன்ற உப்புசப்பில்லாத அலங்காரமான அறிவிப்புகளை வெளியிட அவர்களுக்கு கொஞ்சம் கூட குற்றவுணர்வோ தயக்கமோ இருப்பதில்லை.

ஒரே ஒரு கேள்வி…

இந்தியாவின் இருபத்தி எட்டு மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்கள் என முப்பத்தி ஆறு முதலமைச்சர்கள் இருக்கிறார்கள்… தமிழகத்தை தவிர்த்து மற்ற முப்பத்தி ஐந்து முதலமைச்சர்களும் எந்தக் குழுவும் அமைக்காமல், இவர்களைப் போல கோடிக்கணக்கில் செலவு கணக்கு காட்டாமல், சத்தமில்லாமல் தங்கள் மாநில மக்களை மாணவர்களை மீட்டுக் கொண்டிருக்கிறார்களே.

எப்படி?

பதவிக்காக புகழ்பாடும் ஒரு கூட்டத்தினர், புதுடெல்லியில் இருந்து மாணவர்களை மீட்ட புரட்சியே…சென்னையிலிருந்து செங்கல்பட்டுக்கு அனுப்பிவைத் செம்மலே.. என்று உண்மையைச் சொன்னால் கூட பரவாயில்லை…

சிரிப்பூட்டும் வகையில், உக்ரைனில் இருந்து மாணவர்களை மீட்டவரே என்று புகழ் பாடுகிறார்கள்.

தமிழக முதல்வரின் முயற்சியால் தான் தமிழக மாணவர்கள் உக்ரைனில் இருந்து வெளியேற முடிந்தது என்று தத்துவம் பேசுவதை, முதல்வர் எப்படி ரசிக்கிறார் என்று எனக்கு புரியவில்லை. மீட்பு மன்னர் மோடி என்று உலக நாடுகள் போற்றும் வகையில் ஊடகங்கள் பாராட்டும் வகையில் இதற்கு முன் பாரதப் பிரதமர் திரு பல மீட்பு நடவடிக்கைகளை வெற்றிகரமாக நிறைவேற்றி இருக்கிறார்.

2015ஆம் ஆண்டு ஏமன் நாட்டு அரசியல் குழப்பத்திலிருந்து 4,640 பேரை மீட்டுக் கொண்டு வந்த ஆப்ரேஷன் ரஹத்…. நேபாள நிலநடுக்கத்தில் 2015ஆம் ஆண்டு சிக்கியிருந்த 1935 இந்தியர்களை மீட்டுக் கொண்டு வந்த ஆப்ரேஷன் மைத்ரி….கொரோனா நோய்த் தொற்றால் பல உலக நாடுகளில் சிக்கியிருந்த 60 இலட்சம் பேரை மீட்டெடுத்த மாபெரும் ஒருங்கிணைந்த மீட்புப்பணி ஆப்ரேஷன் வந்தே பாரத் 2020….

2020 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் போரிலே கொண்டிருந்த 800 இந்தியர்களை மீட்டெடுத்த ஆப்பரேஷன் தேவி சக்தி… அதைத்தொடர்ந்து தற்போது ரஷ்யப் போரிலே சிக்கியிருந்த மாணவர்களை மீட்கும் ஆப்பரேஷன் கங்கா…16 ஆயிரம் இந்தியர்களை மீட்டு இருக்கிறது.

போர் தீவிரமாக நடைபெறும் சுமியிலிருந்து கூட சமீபத்தில் 600க்கு மேற்பட்ட மாணவர்கள் மத்திய அரசின் மீட்புக் குழுவினரால் காப்பாற்றப்பட்டு இருக்கிறார்கள்…

இந்திய மாணவர்களில் மாணவர்களை மீட்கும் பொறுப்பிலேயே மத்திய அரசின் வெளியுறவுத்துறை உலகின் அத்தனை நாடுகளும் வியந்து போற்றும் படி செயல்பட்டு கொண்டிருக்கும் வேளையிலே, தானும் ஒரு கண்துடைப்பு வெளியுறவு துறைக்கான குழுவை தமிழக அரசு அமைத்தது வேடிக்கையானது.

அந்த குழு அமைத்த உடனேயே அவர்கள் செய்த ஒரே வேலை வெளியுறவு துறை அமைச்சரை சந்தித்து பேசியது மட்டுமே. இதற்கு இவர்கள் செய்த செலவு மூன்றரை கோடி ரூபாய்.

திமுகவின் நாளேடான முரசொலியில் வந்திருக்கும் ஒரு செய்தியில், உக்ரேனில் தமிழக மீட்புக்குழுவினர் செயல்பட்டது போல, மத்திய அரசின் மீட்புக் குழுவினரை எல்லாம், தமிழக அரசின் குழுவினர் போல சித்தரிக்கும் பேட்டியை படிக்கும்போது, தமிழக மக்களை எல்லாம் இவர்கள் எந்த அளவுக்கு முட்டாள்களாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற உண்மை புரிந்தது.

தமிழக மக்களை எதைச் சொன்னாலும் நம்பும் ஏமாந்தவர்களாக நினைக்கும் எகத்தாளம் தெரிந்தது. பாரதப் பிரதமருக்கு மக்கள் அளித்துவரும் ஆதரவையும் பாரதிய ஜனதா கட்சி பெற்ற வெற்றிகளையும் பார்த்து கலங்கிப் போன தமிழக முதலமைச்சர், பிரதமரின் அனைத்து திட்டங்களையும் ஒரு சில மாறுதல்களுடன் தமிழக அரசின் திட்டமாக அறிவிக்கிறார்கள்.

மத்திய அரசின் திட்டங்களை எல்லாம், தன்னுடைய திட்டங்களாக தமிழக அரசு ஒரு அறிவிப்பு ஆட்சியை மட்டும் நடத்திக் கொண்டிருக்கிறது. மற்றபடி அவர்களுக்கு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்ற நேர்மறை எண்ணம் இல்லாமல் , மத்திய பாரதிய ஜனதா கட்சி அரசுக்கு நல்ல பெயர் வந்து விடக்கூடாது என்ற எதிர்மறை எண்ணம் மேலோங்கி இருக்கிறது.

எல்லா மத்தியஅரசுத் திட்டங்களுக்கும், எல்லா மத்திய அரசின் முயற்சிகளுக்கும் தாங்கள் தான் காரணம் என்று தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள். மத்திய அரசு மிக அதிகமான மக்கள் நலத்திட்டங்களை வழங்கி கொண்டிருப்பதால், திமுக அரசுக்கு மத்திய அரசின் திட்டங்களுக்கு திமுகவின் லேபிள் ஒட்டும் வேலையே சரியாக இருக்கிறது. மக்கள் புரிதலுடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

vaaitha

நாங்க அதுக்காக அழையுறமா?… ‘வாய்தா’-வுக்கு எதிராக கொந்தளித்த வழக்கறிஞர்கள்!

வாய்தா என்ற திரைப்படத்திற்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது….