BREAKING முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் மீண்டும் சோதனை!

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய 60 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

அதிமுக ஆட்சியின் போது உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தவர் எஸ்.பி.வேலுமணி. அமைச்சராக இருந்த சமயத்தில் முறைகேடாக டெண்டர் வழங்கியதாகவும், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் எஸ்.பி.வேலுமணி மீது புகார்கள் எழுந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் மட்டுமல்லாது அவருக்கு நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் டெண்டர் வழங்கிய நிறுவனங்கள் என மொத்தம் 60க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

அந்த சோதனையில் 13 லட்சம் ரொக்கம், 2 கோடி வைப்புத்தொகை, டெண்டர் ஆவணங்கள் ஆகியன கைப்பற்றபப்ட்டன. இந்நிலையில் மீண்டும் இன்று காலை முதலே எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான வீடு உள்ளிட்ட 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

கோவை மைல்கல் பகுதியில் உள்ள வேலுமணியின் வீடு, அவரது நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது. கோவை, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் டிஎஸ்பி தலைமையிலான அதிகாரிகள் குழு சோதனையில் ஈடுபட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

கடலூரில் கொட்டி தீர்த்த கன மழையால் வாழை மரங்கள் சேதம்: இழப்பீடு வழங்க வேல்முருகன் கோரிக்கை !!

தமிழகத்தில் நெல் சாகுபடிக்கு அடுத்தப்படியாக அதிகமாக பயிரிடப்படுவது வாழையாகும். இந்தியாவிலேயே அதிகப்படியாக வாழை…