பட்ஜெட் தாக்கல் நிறைவு… நிதி நிலை அறிக்கையை வாசித்து முடித்தார் பிடிஆர்!

பட்ஜெட் உரையை வாசித்து முடித்தார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன். 1 மணி நேரம் 54 நிமிடம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து சபாநாயகர் அவையை ஒத்திவைத்தார்

சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தது. அதனைத் தொடர்ந்து இன்று காலை 10 மணிக்கு 2022 – 2023ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

அவை தொடங்கிய சிறிது நேரத்திலேயே எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இருப்பினும் நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் நிதி நிலை அறிக்கையை தொடர்ந்து வாசித்தார். காவல்துறைக்கு 10 ஆயிரத்து 285 கோடி ஒதுக்கீடு, இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு, சென்னை வெள்ளத் தடுப்பு பணிகளுக்காக ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு என பல்வேறு திட்டங்களை அறிவித்தார்.

காலை சரியாக 10 மணிக்கு பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், 1 மணி நேரம் 54 நிமிடம் இடைவிடாது பட்ஜெட் உரையை வாசித்து முடித்தார் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன். இதனையடுத்து சபாநாயகர் அப்பாவு அவையை ஒத்திவைத்தார்.

Leave a Reply

Your email address will not be published.

vaaitha

நாங்க அதுக்காக அழையுறமா?… ‘வாய்தா’-வுக்கு எதிராக கொந்தளித்த வழக்கறிஞர்கள்!

வாய்தா என்ற திரைப்படத்திற்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது….