யாரு கிட்ட… மத்திய அமைச்சருக்கு செம்ம ஷாக் கொடுத்த திமுக அமைச்சர்!

டெல்லியில் ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின்கட்காரியை தமிழக பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறை முகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் சந்தித்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் ‘தமிழகத்தில், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்டங்களை செயல்படுத்த, தமிழக அரசு போதிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை’ என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்தார். இதுதொடர்பாக உடனடியாக மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத் திட்டங்கள் தொடர்பான அனைத்து பணிகளையும் விரைவுபடுத்த தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு தமிழ்நாடு அரசு தனது முழு ஒத்துழைப்பை வழங்கும் உறுதி அளித்திருந்தார்.
இதனிடையில் ஒன்றிய அரசு செயல்படுத்தாமல் உள்ள மற்றும் உடனடியாக செயல்படுத்த புதிய வேண்டிய திட்டங்கள் எத்தனை தமிழகத்தில் உள்ளன என்ற பட்டியலோடு டெல்லி சென்ற, தமிழ்நாடு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின்கட்காரி நேரில் சந்தித்து நேரில் வலியுறுத்தியுள்ளார்.
இந்தச்சந்திப்பின்போது, சில நெடுஞ்சாலைத் திட்டங்களைஉடனடியாக செயல்படுத்தப்படவேண்டியதன் அவசியத்தையும் ஒன்றியஅமைச்சரிடம் விரிவாகவிளக்கி கூறியுள்ளார்.
1) செங்கல்பட்டு முதல் திண்டிவனம் வரையிலான சாலையினை,எட்டு வழித்தடமாக அகலப்படுத்துதல்.
2) சென்னை – தடா சாலையில், மாதவரம் சந்திப்பு முதல் சென்னை வெளிவட்டச் சாலை வரை ஆறுவழித்தட உயர்மட்டச்சாலை அமைத்தல்.
3) திருச்சி முதல் துவாக்குடி வரையிலான உயர்மட்டச் சாலை.
4) தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரையிலான உயர்மட்டச்சாலை.
5) வாலாஜா -பூந்தமல்லி சாலையில், மதுரவாயல் சந்திப்பு முதல் ஸ்ரீ பெரும்புதூர் சுங்கச்சாவடி வரை ஆறுவழித்தட உயர்மட்டச்சாலை அமைத்தல்.
6) கோயம்புத்தூர் – சத்தியமங்கலம் தேசிய நெடுஞ்சாலை
7) கோயமுத்தூர் நகரின் அரை வட்டச்சாலை.
8) திருச்சிராப்பள்ளி நகரின் அரை வட்டச்சாலை.
9) கொள்கைஅளவில்தேசியநெடுஞ்சாலையாகதரம்உயர்த்தஒப்புதல்அளிக்கப்பட்ட 8 சாலைகளுக்குஉரியஅறிவிக்கையினைஇந்தியஅரசிதழில்வெளியிடுதல்.
10) நகராட்சி எல்லைக்குள் இயங்கும் இந்திய தேசியநெடுஞ்சாலைஆ ணையத்தின் ஐந்து சுங்கச்சாவடிகளை அகற்றுதல். இத்திட்டங்களைநிறைவேற்றவேண்டுமென்றும், அதன்அவசியத்தையும், எடுத்துரைத்துள்ளார்.