அவசர ஆலோசனை… அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு ஈபிஎஸ் – ஓபிஎஸ் கொடுத்த அட்வைஸ்!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அக்கட்சியின் எம்எல்ஏக்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் வரும் 24ஆம் தேதி வரை நடைபெறும் என சட்டப்பேரவை தலைவர் அறிவித்துள்ளார். இந்நிலையில் சட்டப்பேரவையில் அதிமுக சார்பில் எழுப்பப்பட வேண்டிய பிரச்சனைகள் தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அக்கட்சியின் எம்எல்ஏக்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கேபி.முனுசாமி, வைத்திலிங்கம், முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, செங்கோட்டையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விவாதத்தின்போது சட்டமன்ற உறுப்பினர்கள் துல்லியமாகவும், புள்ளி விவரங்களோடும் பேச வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மேலும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தோல்வி குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published.