2வது நாளாக தொடரும் ‘எனக்கு தெரியாது’… ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓபிஎஸ் வாக்குமூலம்!

திருப்பரங்குன்றம், தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய 3 இடைத்தேர்தலுக்கும் வேட்பாளரை தேர்வு செய்தது ஜெயலலிதாதான் என்றும், இடைத்தேர்தல் தொடர்பான படிவங்களில் ஜெயலலலிதா கைரேகை வைத்தது எனக்கு தெரியும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கை ஆறுமுகசாமி ஆணையம் விசாரித்து வருகிறது. இதில் முதன் முறையாக நேற்று ஆஜரான அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பெரும்பாலான கேள்விகளுக்கு தெரியாது என்றே பதிலளித்திருந்தார். 2016 செப்டம்பர் 22ம் தேதி ஜெயலலிதா மருத்துவமனையில் எதற்காக அனுமதிக்கப்பட்டார் என்ற விவரமும் தனக்கு தெரியாது என்றும், த ஊரில் இருந்த போது நள்ளிரவு நேரத்தில் என் உதவியாளர் மூலம் தெரிந்து கொண்டேன், மறுநாள் பிற்பகலில் அப்போலோ மருத்துவமனை சென்று அங்கிருந்த தலைமைச் செயலாளரிடம் விவரங்களை கேட்டறிந்தேன் என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முந்தைய தினம் மெட்ரோ ரயில் நிகழ்வில் கலந்து கொண்டபோது ஜெயலலிதாவை பார்த்தேன்; அதற்கு பின்னர் அவரை பார்க்கவில்லை எனத் தெரிவித்துள்ளார். ஆறுமுகசாமி ஆணையத்தில் விளக்கம்

ஜெயலலிதாவுக்கு சர்க்கரை அதிகமாக இருக்கிறது என்பதை தவிர அவருக்கு இருக்கும் வேறு உடல் உபாதைகள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்றும், துணை முதலமைச்சர் என்ற அடிப்படையில் விசாரணை ஆணையம் அமைக்கும் கோப்பில் நானும் கையெழுத்திட்டுள்ளேன் என்றும் ஓ.பன்னீர்செல்வம் அளித்துள்ள பதில்கள் சர்ச்சையை கிளப்பியது.

இந்நிலையில், இரண்டாவது நாளாக இன்று ஓ.பன்னீர்செல்வம் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜராகியுள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, வேட்பாளர்கள் படிவத்தில் கைரேகை வைக்கப்பட்டிருந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதுதொடர்பாக இன்று விசாரணைக்கு ஆஜரான ஓ.பன்னீர்செல்வத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு திருப்பரங்குன்றம், தஞ்சாவூர், அரவக்குறிச்சி தேர்தலுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்தது ஜெயலலிதா தான் என்றும், அதற்கான படிவத்தில் கையெழுத்து வைத்தது ஜெயலலிதான் என்பது தனக்கு தெரியும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது ஒரு சில முறை அவர் நன்றாக இருப்பதாக சசிகலா தன்னிடம் தெரிவித்ததாகவும், மருத்துவமனையில் ஜெயலலிதாவிற்கு என்ன மாதிரியான உணவுகள் வழங்கப்பட்டது என எனக்கு தெரியாது என்றும் பதிலளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

vaaitha

நாங்க அதுக்காக அழையுறமா?… ‘வாய்தா’-வுக்கு எதிராக கொந்தளித்த வழக்கறிஞர்கள்!

வாய்தா என்ற திரைப்படத்திற்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது….