ஓபிஎஸ் செயலால் உருகிப்போன சசிகலா… என்ன சொல்லியிருக்கார் தெரியுமா?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. ஆணையத்தில் நேற்று முன் தினமும், நேற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது பல்வேறு கேள்விகளுக்கு எனக்குத் தெரியாது என அவர் பதிலளித்தது சோசியல் மீடியாவில் விவாதப் பொருளாக மாறியது. மேலும் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பின் போது சசிகலா குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம் சின்னம்மா எனக்குறிப்பிட்டது அதிமுகவினரை கடும் கொந்தளிப்பில் ஆழ்த்தியது. மேலும் ஜெயலலிதாவிற்கு எதிராக சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் எவ்வித சதித்திட்டமும் தீட்டவில்லை என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று சென்னை தியாகராயநகரில் உள்ள இல்லத்தில் வி.கே.சசிகலா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், எனக்கு உடல்நிலை சரி இல்லாத போது கட்சி தொண்டர்கள் தங்கள் மாவட்டத்தில் உள்ள கோயில்களில் வேண்டுதல் வைத்திருந்தனர். அதனை நிறைவேற்ற கோயில்களுக்கு சென்று வந்தேன்

சென்ற இடம் அனைத்திலும் பொதுமக்கள் அன்போடு பழகினார்கள்

கடவுளுக்கு தெரிந்த உண்மை ஓ.பன்னீர்செல்வத்தின் மூலம் நேற்று மக்களுக்கும் தெரிந்துள்ளது

எது உண்மையோ அதனை மாற்ற முடியாது, திரையிட்டு மறைக்க முடியாது

எனத் தெரிவித்தார்.

அதிமுக தரப்பிடமிருந்து இதுவரை எந்தவித சமிஞ்சையும் வரவில்லை, அதற்காக எனக்கு வருத்தமும் இல்லை. எம்.ஜி.ஆருக்கு பிறகு ஜெயலலிதா தனியாக தான் இருந்தார். நாங்கள் அவருடன் இருந்து ஆட்சியமைத்தோம்

உங்கள் மீது தனிப்பட்ட முறையில் மரியாதை இருக்கிறது என ஓ.பன்னீர்செல்வம் கூறிய கேள்விக்கு அவர் உண்மையை சொல்லியிருப்பதாக சசிகலா பதில்

பொதுமக்களுக்கு உண்மை தெரியவேண்டும் என்பதற்காக ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது சரி தான் என அன்றைக்கே சொல்லியுள்ளேன் என்றும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *