தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்த சிறுபான்மையினர் காரணமா?… கொளுத்திப் போடும் அண்ணாமலை!

திமுக ஆட்சி வெறும் அலங்கார அறிவிப்பு ஆட்சி தான் என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

எந்த ஆட்சியும் 60 மாதங்களுக்கான ஆட்சி தான் ; 5 ஆண்டு காலம் முடியும் போது அவர்களுக்கு வயது 5 தான் ; அப்போது 5 வயது குழந்தையிடம் வாக்குறுதி என்ன ஆச்சு என்று கேட்கிறீர்களே என்று முதலமைச்சர் கேட்பார் போல எனபாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.

திமுக தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள வாக்குறுதிகள் எல்லாம் அறிவிப்புக் கோப்புகளாக இருக்கிறது என்று தான் அர்த்தம் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கான எந்த முயற்சியையும் திமுக அரசு எடுக்கவில்லை.

சிறுபான்மையினரால் தாலிக்கு தங்கம் திட்டத்தை பயன்படுத்த முடியாது என்பதாலும், பிற பெண்களுக்கு தாலி அறுக்கும் போராட்டத்தில் ஈடுபடுவதாலும் தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்திவிட்டார்கள் என்று சிலர் கூறுவதை நம்பாமல் இருக்க முடியவில்லை..

தன்னுடைய தோல்வியை மறைப்பதற்காக முதலமைச்சர் பயன்படுத்தத் தொடங்கியிருக்கும் ஆயுதம் அதிமுக. தன்னை நோக்கி கேள்வி எழுப்பும் போது தான் மட்டும் செயலற்று இருக்கவில்லை ; முந்தைய ஆட்சியிலும் அப்படித்தான் இருந்தார்கள் என்பதால் என்னை கேள்வி கேட்காதீர்கள் என்று இருக்கிறது அவர் படித்த உரை 20% ஆட்சிக்காலத்தை நிறைவு செய்திருக்கும் அறிவாலய அறிவிப்பு ஆட்சி, மக்கள் மதிப்பீட்டில் எத்தனை மதிப்பெண்கள் பெற்றிருக்கும் என்பதை உங்கள் யூகத்துக்கே விட்டுவிடுகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

கடலூரில் கொட்டி தீர்த்த கன மழையால் வாழை மரங்கள் சேதம்: இழப்பீடு வழங்க வேல்முருகன் கோரிக்கை !!

தமிழகத்தில் நெல் சாகுபடிக்கு அடுத்தப்படியாக அதிகமாக பயிரிடப்படுவது வாழையாகும். இந்தியாவிலேயே அதிகப்படியாக வாழை…