அமெரிக்க அதிபரை கண்டிக்கும் பிரான்ஸ்.! இனிமேல் அதை பத்தி பேசாதிங்க.. ஆள விடுங்க..!

நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட  அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் குறித்து பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், உக்ரைன் நாட்டை போல் நினைத்து  மற்ற நாட்டில் நுழையலாம் என்ற  எண்ணம் ஒரு போதும் வரக்கூடாது. அதேபோல்  ஒருபோதும் நேட்டோ எல்லைக்குள்  நுழையும் எண்ணம் இருக்க கூடாது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இவர் பேசிய வார்த்தைகளுக்கு பிரான்ஸ் அதிபர் கண்டனம் தெரிவித்துள்ளார். துருக்கியில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெறும்  இந்த நேரத்தில் இது போன்ற கருத்து தெரிவித்து, நிலையை மேலும் மோசமடையச் செய்ய வேண்டும் என பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன்,  அமெரிக்க அதிபர் ஜோ பைடன்யை கண்டித்திருக்கிறார். 

இதற்கு விளக்கமளித்த அமெரிக்க  செயலர் ஆண்டனி பிளிங்கன், 

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், பிற நாட்டில் போர் தொடுத்து விடக்கூடாது என்ற அர்த்தத்தில்தான் ஜோ பைடன் பேசினார். ரஷ்யா மட்டுமின்றி எந்த நாட்டின் அரசியலையும் மாற்றம் செய்யக்கூடிய திட்டம் அமெரிக்காவிற்கு கிடையாது என்று தெரிவித்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published.