இதுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை..! விழி பிதுங்கும் முன்னணி நிறுவனம்…

சுவிஸ் நாட்டின் முன்னணி நிறுவனமாக சூரிச் இன்சூரன்ஸ் விளங்குகிறது. இந்நிறுவனம் தற்போது பரபரப்பாக தன்னுடைய சூரிச் (Zurich) என்ற பெயரில் உள்ள என்ற இசட் எழுத்தை நீக்க போவதாக அறிவித்துள்ளது. தற்போது நடந்துவரும் உக்ரைன் – ரஷ்யா போருக்கு பல நாடுகள் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகிறது.
இந்த நிலையில் பல நாடுகள் ரஷ்யாவுக்கு தங்களின் ஆதரவை இசட் என்ற எழுத்தின் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர்.
ரஷ்யா – உக்ரைன் போருக்கு எவ்விதமான தொடர்பும் இல்லாத நிலையில் சுவிஸ் நிறுவனமும் பாதிக்கப்பட்டுள்ளது.
அதுவே தற்போது சூரிச் இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு முக்கியமான பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இதனால் இந்த நிறுவனத்தின் பங்கு ஆனது கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. தங்கள் நிறுவனத்தின் முதல் எழுந்தான இசட் என்ற எழுத்தானது நிறுவனத்தின் விளம்பரத்திற்காக மட்டுமே உருவாக்கப்பட்டது. இதை தவிர மற்றபடி எந்த அமைப்புடனும் தொடர்புடையது அல்ல எனவும் நாங்கள் யாருக்கும் ஆதரவு தர போவதில்லை என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
பல நாடுகள் ரஷ்யா எதிராக பொருளாதார தடை விதித்த நிலையில் அதன் தாக்கம் நம்முடைய நிறுவனத்தையும் பாதிக்குமா என அந்நிறுவனம் அச்சப்படுகிறது.