முடிஞ்சா கைது பண்ணுங்க… திமுகவிற்கு சவால் விட்ட அண்ணாமலை!

100 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்கும் திமுகவினர் அதற்கு தகுந்த ஆதாரம் வைத்துள்ளார்களா என கேள்வி எழுப்பிய அண்ணாமலை, முடிந்தால் தன்னை கைது செய்யுங்கள் என சவால் விடுத்துள்ளார்.
சென்னை தியாகராய நகரில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியதாக கூறி, 100 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்கும் திமுகவினர் அதற்கு தகுந்த ஆதாரம் வைத்துள்ளார்களா என கேள்வி எழுப்பினார்.
எந்த பிரச்னையையும் எதிர்கொண்டு, நீதிமன்றத்தில் சந்திக்க தயார் எனவும் அண்ணாமலை தெரிவித்தார். ஆளும் கட்சியை கேள்வி கேட்க கூடாது என்பதற்காக, கருத்துச் சுதந்திரத்தின் குரல் வலையை திமுகவினர் நெருக்குவதாக அண்ணாமலை குற்றம்சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், தான் 6 மணி நேரம் கமலாலயத்திலேயே காத்திருக்க தயார் எனவும், முடிந்தால் தன்னை கைது செய்யுங்கள் எனவும் திமுக அரசுக்கு, சவால் விடுத்துள்ளார்.