“கைது செய்… கைது செய்.. என வடிவேலு மாதிரி காமெடி செய்கிறார”… அண்ணாமலை அசிங்கப்படுத்திய ஆர்.எஸ்.பாரதி

annamalai

100 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்கும் திமுகவினர் அதற்கு தகுந்த ஆதாரம் வைத்துள்ளார்களா என கேள்வி எழுப்பினார். எந்த பிரச்னையையும் எதிர்கொண்டு, நீதிமன்றத்தில் சந்திக்க தயார் என தெரிவித்துள்ள அண்ணாமலை, தான் 6 மணி நேரம் கமலாலயத்திலேயே காத்திருக்க தயார் எனவும், முடிந்தால் தன்னை கைது செய்யுங்கள் எனவும் திமுக அரசுக்கு, சவால் விடுத்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாடு முதலமைச்சரின் துபாய் பயணம் மிகப்பெரும் வெற்றியாக அமைந்துள்ளதை பொறுத்துக்கொள்ள முடியாமல் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பொய்யான தகவல்களை கூறி வருவதாக குற்றம்சாட்டினார்.

வடிவேலு காமெடி போல தன்னை கைது செய்யுங்கள் என அரசியல் பக்குவம் இன்றி அண்ணாமலை பேசுவதாகவும் ஆர்.எஸ். பாரதி விமர்சித்தார்.

கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் முதலமைச்சர் சித்தராமையா ஆட்சியை கவிழ்க்க தமிழ்நாடு அரசியல்வாதிகளிடம் இருந்து கோடி கோடியாக பணம் சென்றது தொடர்பான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதும்,
தக்க நேரம் வரும்போது ஆதாரம் வெளியிடப்படும் எனவும் ஆர்.எஸ். பாரதி எச்சரிக்கை விடுத்தார்.

Leave a Reply

Your email address will not be published.