கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை… 6 அம்ச கோரிக்கையுடன் டெல்லி பறந்த மா.சு!

Ma subramaniyan

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை தமிழ்நாடு சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியம் சந்தித்து தமிழகத்திற்கான கோரிக்கை மனுவை வழங்கியுள்ளார்.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுடன் டெல்லியில் இன்று சந்தித்தார். இந்த சந்திப்பின்போது மருத்துவ கட்டமைப்பை தமிழகத்தில் மேம்படுத்துவதற்கான 6 கோரிக்கைகளை வழங்கியுள்ளார்.

  1. உக்ரைனில் இருந்து இந்தியா வந்திருக்கும் மாணவர்களின் மருத்துவ கல்வியை போலாந்து உள்ளிட்ட உக்ரைனில் அண்டை நாடுகளில் படிப்பதற்கு ஏதுவான வழிவகைகளை அமைத்து தர வேண்டும்.
  2. பெரம்பலூர் மயிலாடுதுறை தென்காசி ராணிப்பேட்டை காஞ்சிபுரம் திருப்பத்தூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகளை அமைக்க மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும்.
  3. மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பணிகளை விரைந்து தொடங்க வேண்டும்.
  4. கோவையில் புதிய எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி அமைப்பதற்கான அனுமதி வழங்க வேண்டும்.
  5. ஜூலை 17ம் தேதி நடைபெற உள்ள நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்.
  6. நீரிழிவு நோய்க்கான புதிய பட்டப்படிப்பு துவங்க அனுமதி அளிக்க வேண்டும்.

உள்ளிட்ட ஆறு கோரிக்கைகள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சருடன் நடைபெற்றுவரும் சந்திப்பில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் வழங்கியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

vaaitha

நாங்க அதுக்காக அழையுறமா?… ‘வாய்தா’-வுக்கு எதிராக கொந்தளித்த வழக்கறிஞர்கள்!

வாய்தா என்ற திரைப்படத்திற்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது….