மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளராக கே.பாலகிருஷ்ணன் மீண்டும் தேர்வு!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் தமிழ்நாடு மாநிலக்குழுச் செயலாளராக தோழர் கே.பாலகிருஷ்ணன் ஒருமனதாக மீண்டும் தேர்வு செய்யப்படடார்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் 23வது தமிழ்நாடு மாநில மாநாடு 2022 மார்ச் 30,31 ஏப்ரல் 1 ஆகிய தேதிகளில் மதுரையில் நடைபெற்றது. நிறைவு நாளான இன்று நடைபெற்ற இம்மாநாட்டில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் தோழர் பிரகாஷ் காரத், ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே. ரங்கராஜன், உ. வாசுகி, பி. சம்பத், அ. சவுந்தரராசன், ஏ.கே. பத்மநாபன், சுதா சுந்தரராமன் மற்றும் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

பிரதிநிதிகள் மற்றும் பார்வையாளர்கள் உள்ளிட்டு 553 பேர் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர். மாநாட்டின் நிறைவு நாளான இன்று 80 பேர் கொண்ட மாநிலக்குழுவிற்கு 79 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஒரு இடத்திற்கு பின்னர் தேர்வு செய்வது என மாநாடு முடிவு செய்துள்ளது. கட்சியின் மாநிலச் செயலாளராக தோழர் கே பாலகிருஷ்ணன் ஒருமனதாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.

15 பேர் கொண்ட செயற்குழுவும் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டது. 2022 ஏப்ரல் 6-10 ஆகிய தேதிகளில் கேரள மாநிலம் கண்ணூரில் நடைபெறும் 23வது அகில இந்திய மாநாட்டிற்கு தமிழகத்திலிருந்து 50 பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 5 பேர் கொண்ட மாநில கட்டுப்பாட்டுக்குழுவிற்கு தோழர். ப. சுந்தரராசன் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். புதிதாக தேர்வு செய்யப்பட்ட மாநிலக்குழு உறுப்பினர்கள் மற்றும் 23வது அகில இந்திய மாநாட்டில் பங்கேற்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.